Wednesday, 5 September 2012

திராவிட இனத் தலைவர்...


ஆன்றோனே...
சான்றோனே...
அசுரர்குல தலைவனே....
திராவிட இன வேங்கையே...

ஆரியப் பேயை
விரட்டியடித்து
சாதிப் பிணி
தீர்த்தவனே....

தெற்காசியாவின் தந்தையே
நாளொன்று போதாது அய்யா
உந்தன் புகழ் சொல்ல...

பார்ப்பன நரிகளின்
வாலை ஒட்ட நறுக்கிட்டாய்...
திராவிட இனம் வளர
நீயே வித்திட்டாய்...
பெண் விடுதலைக்கு
அடித்தளமித்திட்டாய்...

பிள்ளையாரைப் போட்டு
உடைத்திட்டாய்...
மூட நம்பிக்கையினை
முற்றிலுமாய் ஒழித்திட்டாய்...

நீதிக் கட்சி வளர்த்திட்டாய்
இந்தி திணிப்பை அழித்திட்டாய்...

தள்ளாத வயதிலும்
தலை நிமிர்ந்த்திட்டாய்...
வளரும் சமுதாயத்தின்
தலைசிறந்த எடுத்துக்காட்டாய்...

சிக்கனமே உருவாய் வாழ்ந்து
சிறந்த புகழ் அடைந்திட்டாய்....

விமர்சனங்களை வரவேற்ற
வீர வேங்கையே...
சளைக்காது பாடுபட்டாய்
உம் 95  வது வயதிலும்....

எல்லோரும் சொல்லிவிட்டனர் அய்யா
உம் தன் புகழை...
என்னிடம் வார்த்தையில்லை அய்யா
புதிதாய் பாட உம் புகழை...

உம்முடைய 134  ஆம் ஆண்டு
பிறந்தநாள் விழாவில்
நீர் எங்களோடு இல்லாவிடினும்
உம்மைப் படித்த நாள்முதற்க்கொண்டு
எங்களோடே இருப்பது
போன்றதோர்  உணர்வு ...
இருந்தாலும் சின்ன
மனவருத்தம்தான்...
உம் காலகட்டத்தில்
இல்லாமல் போய்விட்டோமே என்று...

குளமாகிவிட்ட கண்களின்
கண்ணீர்த்துளிகளும்
கண்ணீர்வடிக்கும்
நீர்பட்ட நோயின்
வேதனையை தாங்கமாட்டாமல்...

இரும்பு இதயமே....
நீதி அரசனே...
உம் வித்துக்கள் நாங்கள்...
அயராது உழைத்திடுவோம்

எத்தனை தூண்கள்
எதிர்த்த போதிலும்
கோபுரமாய் உயர்ந்து
நின்றவர் நீரே....

வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அய்யா
எங்களின் இதய சிம்மாசனத்தில்
முடிசூட மன்னனாக...
வணங்கி மகிழ்கிறோம்..
வீர வணக்கம்...

4 comments:

 1. அருமை...பெரியாரின் புகழ் கவிதை....

  ReplyDelete
 2. அருமையான பதிவு, மிக்க நன்றி! உங்கள் எழுத்துக்களை படிக்கும் பொழுது எனக்கும் எழுத தூண்டுகிறது அதற்கும் நன்றி, பிழையிருந்தால் மன்னிக்கவும்.

  பெரியாரும் கடவுளே!
  -----------------

  உண்மையை சொல்வதெனில்,
  எனக்கு பெரியாரை,
  அவ்வளவாக தெரியாது,
  அனால்,
  அவர் சீர்திருத்தம் தெரியும்,
  அவர் எழுத்துக்கள் புரியும்,
  அவர் முனைந்த, முடித்த பல
  சாதனைகள் தெரியும்,
  அவர்,
  கடவுளை கல்லென்றார்,
  மனிதனை மதி என்றார்,
  பெண்மையை துதி என்றார்,
  சாதியை ஒழி என்றார்,
  இந்தியை மிதி என்றார்,
  தொந்தி கணபதியை -
  விதி என்றார் - ஆம்,
  அனைத்துமே தன் உயிர்
  போல் நினைத்து,
  சீர்,
  திருத்த வாதியாய்
  உலகை வளம் வந்தார்,
  வயது, தள்ளாத வயதிலும்,
  தனக்கென சேர்க்காமல்
  தன் கொள்கைகளை சமமாய்
  எல்லோர்க்கும் சேர்த்தார்,
  சாமி இல்லை பூதம் இல்லை
  என்று சொல்லி எனக்கு
  சாமியாய், பூமியாய்
  சமத்துவம் சொல்லி,
  தருசாய் கிடந்த என்னை,
  அவர் சொல்லால் உழுது
  இன்று,
  முழுசாய், பூக்கும் மரமாய்
  மண்ணில் பிறர் நலம் பேண
  நிழலாய் செய்தாரே,

  மண்ணும், விண்ணும்
  இருக்கும் காலம் வரை
  மனிதம் இருக்கும்
  என்றானால்,
  அதுவரை அவரை,
  மறந்திடாது இத்
  தமிழகமும் உலக
  தமிழர்களும்,

  உங்களால் நாங்கள்,
  வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்!

  இனிய பிறந்த நாள் வணக்கங்கள், அய்யா!

  ReplyDelete
  Replies
  1. அருமை அருமை தோழர்.... சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் நம் இனத் தலைவரின் வரலாறையே...

   Delete