Monday, 3 September 2012

ஈன்ற தாய்க்கு இதழ் முத்தம்....




சதை சேர்த்து
குருதி தொடுத்து
தன் மூச்சு அளித்து
வலி பொறுத்து
பாதுகாப்பாய் வைத்து
பத்துமாதம்
அவஸ்தை பொறுத்து
நாம் நிம்மதியாய்
இவ்வுலகம் பார்க்க
எல்லை கடந்த அன்போடு
எதிர் பார்த்திருந்த
அன்னைக்கு
ஈன்ற பொழுதினைக் காட்டிலும்
நல்ல பெயர் வாங்கி
பெரியதொரு மகிழ்ச்சியை
வாங்கி தந்து
இதழ் முத்தம்
கன்னத்தில் பதித்ததில்
என்றும் பேரானந்தமே...

- கிராமத்துக் காதலி...

2 comments: