Monday, 7 January 2013

நான் ஒரு கேள்விக்குறியாய்...ஆங்கில புத்தாண்டு அமைதியில்லாமல் தொடங்கியது... எதையோ தொலைத்தாற்ப்போல் வலிபோருந்திய மனதோடே நகர ஆரம்பித்தது. ஏன் பிறந்தோம்..? எதற்க்காக வளர்த்து விட்டனர் என்னை..? நான் சாதிக்கப் போவது என்ன..? இந்த உலகில் நான் எனக்கு என்று ஒரு அடையாளத்தோடு இருப்பேனா..? நான் நல்லவளா...? யாரையாவது ஏமாற்றி இருக்கிறேனா..? என்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளேன்...? அவர்களிடம் உண்மையாக இருக்கிறேனா..? சொந்தபந்தகளைப் புரிந்து நடந்திருக்கிறேனா...? யார் மனதாவது நோகும்படி இதுவரை நடந்துருக்கிறேனா..? இதுநாள் வரை நான் அனுபவப்பட்டதில் எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணமாய் இருந்தது இரண்டுதான்.... ஓன்று பணம், பணம், பணம்.... மற்றொன்று சாதி சாதி சாதி.... இவை இரண்டிற்கும் ஒரு முடிவு இருந்தால் நான் படும் கஷ்டத்திற்கும், இந்த நாட்டின் தலையான பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைத்து விடும்...  முதலில் நான் நானாக இருக்கிறேனா...? எனக்கு அமைந்ததை வைத்து என்னால் என் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை...?  நான் இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சரியா வாழ்வேனா...? வாய்ச்சொல்லாய் மட்டும் புரட்சி பேசுவது சரியா...? எனக்காய் மட்டுமே வாழ முடிவெடுத்த ஒரு துணையை உதறித் தள்ளுவது முறையா..? என்னுடைய மாற்றம் எப்பொழு நிகழும்...? 

Saturday, 5 January 2013

"பொங்கலோ பொங்கல்"


காசு, பணத்துக்கு கஷ்டப்பட்டு 
கழனியெல்லாம் நீறேரச்சு,
நாத்துகளை நட்டுப்போட்டோம்...
மனசறிஞ்சு முளைச்ச 
பயிரெல்லாம் 

முத்து முத்தா நெல்லாவி 
கரையெங்கும் பசும்பச்சை, 
கண்ணுக்கெதமா குளிர 
எங்க மனசெல்லாம் 
இப்ப இன்ப மழைதான்....


பின்ன அறுவடைக்கு ஆள்புடிச்சு 
காத்திருந்து காத்திருந்து, 
குடும்பமா சேந்து,
சின்னஞ் சிறுசும் 
ஒத்தாவிச்சு அருப்புநாளில....


இருகரு கர்ப்பிணி யானையாய் 
கட்டெல்லாம் கனம் காண 
தூக்கமாட்டாம தூக்கி
களத்துமேடு சேத்து
அலுப்புமறைய பாட்டுபடிச்சு,
பதறெடுத்து சக்கையில செஞ்சோம் 
வைக்கபோரு...

நெல்லுமணி கண்சிமிட்ட 
படிப்படியா அளந்தெடுத்து 
கூலிபோக கொடுத்தனுப்பி 
பொடச்செடுத்த பச்சரியில 
பொறந்தபுள்ள முகம்கண்டோம்....
தமிழன் பரம்பரையில 
வந்தவங்க நாங்க...
நாலெழுத்து படிச்சதில்லை....


தெரிஞ்சதெல்லாம்
பகுத்தறிவு பாசமும் 
மனிதநேய மனசும் 
சுயமரியாதையோட 
சமத்துவ சமரசமா 
 வாழுறோம் நாங்க....
எங்க பரம்பரையில வந்த தமிழ் புத்தாண்டே....


ஒன்ன வரவேற்க 
புது உடுப்பு போட்டு 
பொங்க பானையில 
பச்சரிசி புதுசு போட்டு 
எழுப்பிடுவோம்
சோம்பல் முறிக்கும் கதிரவனை
"பொங்கலோ பொங்கல்"
குலவையிட்டு...

Thursday, 3 January 2013

மரணத்தின் அரண்மனைக்கு...
வலிமையானவன் தான்...
தெளிவானவன் தான்...
பொறுப்பானவன்தான்...
காரியக்காரன்தான்...
ஆனால் 
சிறு கோபத்தினால் 
என் இன்பத்தை 
காவு வாங்கி விட்டு 
அனாதையாக்கி விட்டு
போகிறானே
மரணத்தின் அரண்மனைக்கு...

Un Uthattora Sivappe - Movie Paanjalankurichi

Wednesday, 2 January 2013

அலைகளின் முகம்பார்த்து....


பரந்து விரிந்த 
கடற்கரையில் 
கனத்த இதயத்தை 
கரைத்து விட சென்றேன் ...
காரணமறியா கோபம்,
கலங்க வைத்த சோகம்,
இதனுடன் இடிந்துபோன மனதை 
இதமாய் மாற்ற வழி தேடி 
தனிமையின் துணையோடு
கடலோரம் நான்...


ஆர்ப்பரித்து கொஞ்சிய 
அலைகளோடு எவ்வளவு நேரம் 
அளவளாவினேன் என்றே 
தெரியவில்லை... 
குடிகொண்ட சோகம் 
வெளியேற மனம் கொண்டது...
தெளிவான சிந்தனையும் அமைதியும் 
ஆர்க்கொண்ட சமயம் 
பகிர்ந்துகொள்ள யாருமில்லாமல் 
ஆதரவற்றவளாய் 
ஏதேதோ எண்ணியபடி 
தொலைத்த இன்பத்தை 
சேகரித்துக் கொண்டிருந்தேன்
கரைதொட்டு விளையாடும் 
அலைகளின் முகம்பார்த்து....

அபூர்வ உடல்...

பொது விஷயம் பேசுறது, அறிவார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வது இயல்பு. நமது உடலுக்குள்ளே ஒரு அறிவு விந்தை ஒளிந்திருப்பது நம்முள் பலருக்கு அறியாத அரிய தகவலே... இதோ... உங்கள் பார்வைக்கு சில....


  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
  • பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
  • நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நம்மில் பலர் "உனக்கு கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? " அப்டினுதான் கோபத்தில் திட்டுவாங்க ஆனால் அந்த மூளையைப் பற்றிய தகவல்கள் அறிய முற்படுவதில்லை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் நம் மூளையை பற்றி...

  • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
  • ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
  • நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
  • நமது மூளை 80% நீரால் ஆனது.
  • நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது கண்கள் :-கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.


பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

அபூர்வ உடலைப் பற்றிய அறிய தகவல்கள் தந்து உதவிய கீற்று வலைதளத்திற்கு நன்றிகள் பல....