பரந்து விரிந்த
கடற்கரையில்
கனத்த இதயத்தை
கரைத்து விட சென்றேன் ...
காரணமறியா கோபம்,
கலங்க வைத்த சோகம்,
இதனுடன் இடிந்துபோன மனதை
இதமாய் மாற்ற வழி தேடி
தனிமையின் துணையோடு
கடலோரம் நான்...
ஆர்ப்பரித்து கொஞ்சிய
அலைகளோடு எவ்வளவு நேரம்
அளவளாவினேன் என்றே
தெரியவில்லை...
குடிகொண்ட சோகம்
வெளியேற மனம் கொண்டது...
தெளிவான சிந்தனையும் அமைதியும்
ஆர்க்கொண்ட சமயம்
பகிர்ந்துகொள்ள யாருமில்லாமல்
ஆதரவற்றவளாய்
ஏதேதோ எண்ணியபடி
தொலைத்த இன்பத்தை
சேகரித்துக் கொண்டிருந்தேன்
கரைதொட்டு விளையாடும்
அலைகளின் முகம்பார்த்து....
அைலகளின் முகம் பார்த்து.......
ReplyDeleteஅருைம