Monday, 7 January 2013

நான் ஒரு கேள்விக்குறியாய்...



ஆங்கில புத்தாண்டு அமைதியில்லாமல் தொடங்கியது... எதையோ தொலைத்தாற்ப்போல் வலிபோருந்திய மனதோடே நகர ஆரம்பித்தது. ஏன் பிறந்தோம்..? எதற்க்காக வளர்த்து விட்டனர் என்னை..? நான் சாதிக்கப் போவது என்ன..? இந்த உலகில் நான் எனக்கு என்று ஒரு அடையாளத்தோடு இருப்பேனா..? நான் நல்லவளா...? யாரையாவது ஏமாற்றி இருக்கிறேனா..? என்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளேன்...? அவர்களிடம் உண்மையாக இருக்கிறேனா..? சொந்தபந்தகளைப் புரிந்து நடந்திருக்கிறேனா...? யார் மனதாவது நோகும்படி இதுவரை நடந்துருக்கிறேனா..? இதுநாள் வரை நான் அனுபவப்பட்டதில் எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணமாய் இருந்தது இரண்டுதான்.... ஓன்று பணம், பணம், பணம்.... மற்றொன்று சாதி சாதி சாதி.... இவை இரண்டிற்கும் ஒரு முடிவு இருந்தால் நான் படும் கஷ்டத்திற்கும், இந்த நாட்டின் தலையான பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைத்து விடும்...  முதலில் நான் நானாக இருக்கிறேனா...? எனக்கு அமைந்ததை வைத்து என்னால் என் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை...?  நான் இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சரியா வாழ்வேனா...? வாய்ச்சொல்லாய் மட்டும் புரட்சி பேசுவது சரியா...? எனக்காய் மட்டுமே வாழ முடிவெடுத்த ஒரு துணையை உதறித் தள்ளுவது முறையா..? என்னுடைய மாற்றம் எப்பொழு நிகழும்...? 

2 comments:

  1. தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_7.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.

    ReplyDelete