Wednesday, 31 October 2012

இரவில் மலர்ந்த காதல்....

ஒளி தெரியாத
ஒலி கேட்காத
காரிருளில்
தனிமையை போர்த்திக் கொண்டு
இனிமையாய் ரசித்துக் கொண்டிருந்தேன்
அந்த அமைதிப் பொழுதை...
சண்டை போடும் காற்றும்,
காற்றுக்கு சாமரம் வீசும்
மரங்களும்,
திருட்டுத் தனமாய்
இருட்டை அணைத்த
மழை சாரலும்,
என்னை தழுவிய
குளிர் கோவலனும்,
யாருமில்லா அந்த அறையுள்
மெய் மறைக்கச் செய்தன என்னை...
இந்த பொழுது இப்படியே அமைதியில்
அடங்கி விட்டால்
என் மகிழ்ச்சி நீடிக்கும் என்றெண்ணி
சுயநலப் பட்ட என்னை
மௌனமாய் வந்து கலைத்தது
காதலனின் அழைப்பு...
பொங்கிய இயற்கையின் வாசத்துடன்
காதலின் குரலில்
கசிந்து கொண்டிருந்தேன்
இயற்கையின் வர்ணனை விளக்கிக் கொண்டே...
விடியலுக்கு செல்ல
உறக்கம் என்னை துரத்தியது....
மெல்ல மெல்ல
கண்ணயர்ந்தேன்...
இயற்கையின் அழகை ரசித்தவாறே

இரவில் மலர்ந்த காதலோடு ....

Tuesday, 30 October 2012

உலகையே உலுக்கிய புகைப்படம்...சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த படம் .அந்த குழந்தை இறந்தவுடன் அதனை உண்ண காத்திருக்கும் பறவை என எடுக்கப்பட்ட புகைப்படம் உலகையே உலுக்கியது. இந்த படத்தை எடுத்த Kevin Carter மன அழுத்தத்தால் மூன்று மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார்

சிந்தியுங்கள் தோழர்களே...

                                      
                                      சிந்தியுங்கள் தோழர்களே...
     நாட்டின் குறைகளையும், ஜாதியின் உச்ச கட்டத்தையும் இன்னும் பல பிரச்சினைகளை சுட்டிக் காட்டும் நம் இன திராவிடப் பெண்களை, பெண்பால் உறுப்பினத்தின் பெயர் சொல்லி வார்த்தைகளிலே புணர்ச்சி செய்யும் முக நூல் தோழர்கள் பலரை ஒன்றும் செய்யாத காவல் துறையும், அரசாங்க ஆட்சி கட்சியும் இன்னும் பல ஜால்ரா தோழர்களும், பாடகி சின்மயி போன்றவர்களை குற்றம் சில சொன்னதும் அதிரடி நடவடிக்கை எடுத்தது பார்ப்பன இனத்திற்கு எந்த ஒரு அவபெயரும் வந்து விடக் கூடாது என்பதாலா..?
        இல்லை... நம் போன்ற திராவிட இனத்தை மட்டம் தட்டி அழித்து விட வேண்டும் என்பதாலா..? இதைப் பற்றி விவாதித்தால் குறை சொல்லத் தான் நம் மக்கள் தேடி வருவார்களே தவிர குணம் புரிந்து கொள்ள முற்பட மாட்டார்கள்... எதிர்கால சமுதாயம்.. நீங்களாவது சிந்தியுங்கள் தோழர்களே...

அந்நாள் வரும்...

நினைவுகள்தான் கட்டி
உரசி விளையாடுகின்றன...
நீயும் நானும்
தொலைவில்...
விரைவில் அந்நாள் வரும்...
கலக்கத்தோடு  உன் காதலி ...

Monday, 29 October 2012

வெற்றுடல்...
ஈரடியில் ஓரடி மறைந்தாற் போல்
முக்கனியின் ஒரு இனம் தொலைந்தாற் போல்
நாற்சீரில் கடைசிசீர் குறைந்தாற் போல்
ஐம்புலனில் ஒரு புலன் இழந்தார் போல்
ஓர் உயிர் உடல் நீங்கி அழிந்தாற் போல்
இணை நீங்கி
இந்த பாவையின் வெற்றுடல்......

செயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி...

            செயற்கை நுரையீரல் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஆய்வுக்கூடத்தில் நுரையீரலை உருவாக்கி நோயாளிக்கு பொருத்திவிட முடியும்.

வேர் செல்கள் எனும் மூல செல்கள் நம் உடலின் பல்வேறு பாகங்களில் உள்ளன. இந்த செல்களிலிருந்து நம் உடலில் செயல்படும் பல்வேறு உறுப்புகளின் செல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது நுரையீரலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லிருந்து நுரையீரலை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதற்கு முன்பு மனித உறுப்புகளை குளோனிங் குழந்தை முறையில் பெறும் முயற்சி நடந்தன. குழந்தையை வளர்ப்பதற்குப் பதிலாக குறிப்பிட்ட உறுப்பை வளர்க்கும் அம்முறைக்கு தற்போது உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வேர்ச்செல்களிலிருந்து திசு வளர்ப்பு முறைதான் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் எளிமையான முறை என்று விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார்கள்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நுரையீரல் திசு வளர்க்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரி செய்யவும் இந்த ஆய்வு உதவும்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

‘தாய்’ நாயகன்...  உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால்


தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.

இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.

அன்றைய செண்ட்பீட்டர்ஸ் பார்க் என்ற ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டு கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ்பெற்ற தாய் நாவல். கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை

வாலிபர் உள்ளம்...
வாலிபர்களுக்கு புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம்
 எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் 
எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப் பட வேண்டும். முன்னால் பாதித்தவைகள் அழிக்கப் படவேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத 
மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும்.


16-12-1944 "குடிஅரசு"

பெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்
ஜெர்மானியராகப் பிறந்தவர் ஐன்ஸ்டீன். நாஜீகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சிசாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அவரை அந்த ஆராய்ச்சி சாலைக்கு அழைத்துச் சென்று, சுற்றிக்காட்டி திருப்திதானா? என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கேட்டனர்.ஐன்ஸ்டீன் சற்று தயங்கி தாழ்ந்த குரலில் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி "இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறது, கொஞ்சம் பெரிய குப்பைக் கூடை இருந்தால் நல்லது” என்றார்.

"பெரிய குப்பைக் கூடையா, எதற்கு?”

“நான் என்ன மேதாவியா… எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன், எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்துவிட்டு மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாக செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார்.

தற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது?பண்டைக்காலம் முதலே மனிதர்களிடம் தற்கொலை உணர்வு இருந்து வந்திருக்கிறது. இதற்குக்காரணமாக சமூக, பொருளாதார மற்றும் தனிப்பட்ட காரணங்களைக்கூற முடியும். இதைப் போன்ற காரணங்கள் உள்ள அனைவரும் தற்கொலை முடிவிற்குப்போவதில்லை. சிலர் மட்டுமே தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றனர். ஏன் அப்படி?
உளவியல் நிபுணர்கள் தற்கொலை பற்றிய பல சித்தாந்தங்களை முன்வைக்கின்றனர். எந்தவொரு சித்தாந்தமும
் இறுதியானது என்ற நிலையை இன்னும் எட்டவில்லை.

உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டு கூறும் தத்துவத்தின்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே இறப்பு குறித்த ஒரு ஆர்வம் இருக்கிறதாம். தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ள, புரியாத ஒன்றை புரிந்துகொள்ள, இதுவரை அனுபவித்து அறியாத ஒன்றை அனுபவிக்க மனிதருக்குள் ஓர் ஆர்வம் உந்திக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.


நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது imipramine receptor sites குறைவாக இருப்பது தெரியவந்தது. Imipramine receptors என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். செரடோனின் சுரத்தலை தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணம் குறைக்கப்படுகிறது.
தற்கொலை செய்துகொள்பவர்களிடம் அதற்கு முன்னதாக சில மாற்றங்கள் காணப்படுகின்றன. உடனிருப்பவர்களால் அந்த மாற்றங்களை உணர முடியும்.

அடிப்படை குணாதிசயங்களில் மாற்றம், எதிலும் பிடிப்பின்றி தனியே ஒதுங்கியிருத்தல், அடிக்கடி எரிச்சலடைதல், வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை, திடீரென அழுகை...கோபம்...துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல், மரணத்தைப்பற்றி அடிக்கடி பேசுதல் ஆகிய மாற்றங்களை நெருங்கிய தொடர்புடையவர்கள் கண்டறிந்து தற்கொலைகளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: கலைக்கதிர், டிசம்பர் 2008
தகவல்: மு.குருமூர்த்தி

விலங்குகளைக் கொல்லாமல் கிடைக்கும் இறைச்சி...


விலங்குகளைக் கொன்று பெறும் இறைச்சியை ஆய்வுக் கூடத்தில் செயற்கையாகவே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் கொல்லப்படுவதன் மூலம் நாம் இறைச்சி பெறுகிறோம். ஆனால் எதிர்காலத்தில் இதற்க்கு முடிவு கட்டி ஆய்வுக் கூடங்களிலிருந்து நேரடியாக இறைச்சியே கிடைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

விலங்குகளிலிருந்து பெறப்படும் திசுக்கள் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படும் போது அவை இறைச்சியாகின்றன. இவற்றை வேண்டிய அளவுக்குக் கொழுப்பு மற்றும் சத்துக்களையும் அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும் என்பதும் இந்த முறையில் செயற்கை இறைச்சியை தற்போதே ஆய்வுக் கூடத்தில் உருவாக்க முடியும். ஆனால் வர்த்தக ரீதியில் ஒட்டு மொத்தமாக உருவாக்குவது பற்றிதான் இப்போது பேச்சே.

ஒரு செல்லிலிருந்து இந்த உலகத்துக்குக் தேவைப்படும் இறைச்சியை விலங்குகளைக் கொல்லாமலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். முதலில் மருத்துவத் தேவைக்காக விலங்குகள் செல்கள் திசு வளர்ப்பு முறையில் அதிகரிக்கப்பட்டன. தற்போது இறைச்சித் தேவையையும் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். விலங்கு செல்தான் இதற்கு மூல ஆதாரம் என்றாலும் ஆய்வுக்கூடங்களில் வளர்ந்த கறி விலங்கிலிருந்து எடுக்கப்படவில்லை என்பதால் அது சைவமா அசைவமா என்ற சர்ச்சை கூட எதிர்காலத்தில் எழும்.

ஃபாஸ்ட் புட் விபரீதம்...                                            இந்தியாவில் துரித உணவை 
சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காய்கறிகள் சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச் ஃபிரையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. இதனால் சிறுவயதிலேயே உடல்பருமன் நோய் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கூல்டிரிங்க்ஸ்களின் உபயோகம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல் நூற்று
எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில் இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.

Saturday, 27 October 2012

சந்தனக் கன்னத்தில்...

அரைத்த சந்தானம்
அயர்ந்து போவதற்குள்
எதார்த்தமாய்
எழுதிவிட்டாயே 
என் முகத்தில் பூசி...
என் கோபம் ரசிக்க
தூரம் போன
உன் திமிர் முகம் காண
எத்தனித்தேன்...
சென்று விட்டாய்...
மனம் முழுக்க
காதலோடு நீ தொட்ட
சந்தனக் கன்னத்தில்
நானும் தொட்டு 
ரசித்துக் கொண்டிருந்தேன்...
களவாணித் தனமாய்....

இதயக் கூட்டில்....

முகம் திரும்பி விடாதே...

அனிச்சை மலராய்
உன் முகம் தன்னை நோக்கையில்
எதேச்சையாய் நான்
சுருங்கிப் போவேன்
இதயக் கூட்டில்....

இரண்டு முக இந்தியா...

மழை தாங்கிய மேகமாய் வானம் இருக்கையில் மழை வரலாம் அல்லது பொய்த்தும் போகலாம். அந்த சமயம் வெளியில் செல்லுகையில்  குடை எடுத்து சென்றால் மழையில் இருந்து தப்பிக்கலாம், இல்லை நனைந்துதான் வரலாம்… இது ஒரு நிகழ்வின் சாதரணமான இரண்டு நிலைகள். வாழ்க்கையின் நிகழ்வுகளில் இப்படி இரண்டு நிலைகள் இருக்கின்றனவோ இல்லையோ, நாம் வாழும் இந்தியா இரண்டு வகை நிலைப்பாடோடுதான் இருக்கிறது. ஒன்று நவீன இந்தியா, மற்றொன்று ஏழ்மையான இந்தியா. முதலில் நவீன இந்தியாவை பற்றி பார்ப்போம்.
சாதனைகள் பல கொண்டாடிய இந்தியாதான் நவீன இந்தியா. உலகில் இருக்கும் துடிப்பு மிக்க, வளரும் நாடு இந்தியா. தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளின் வரிடையில் முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தை தக்க வைத்து வரும் தேசம். அறிவியல், தொழில்நுட்பம் இவற்றில் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் கொண்டு ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் இந்தியாவிற்கு மூன்றாம் இடம்.
 உலகின் எந்த ஒரு பெரிய கணினி நிறுவனத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும், அதனுடைய அளவளாவிய வளர்ச்சியில் நிச்சயம் ஒரு இந்தியரின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். எழுத்துலகின் பெருமைக்குரிய சர்வதேச விருதுகளான நோபல், புக்கர், புலிட்சர் இவற்றையெல்லாம் வென்று நமக்கு பெருமை சேர்த்தவர்களும்  இந்தியர்களே . வேளாண் துறையை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை, நிலக்கடலை, தேயிலை, காய்கனிகள் இவற்றின் உற்பத்தி வரிசையில் உலகிலே முதல் இடத்தில் இந்தியாதான். அரிசி, கோதுமை, பால் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இந்தியாதான். இப்படி பல்வேறுபட்ட துறைகளிலும் தன் வளர்ச்சியை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டிருக்கிறது நம் இந்திய நாடு. ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த வேகத்தில் உழைத்தால் நிச்சயம் மாபெரும் பணக்கார நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கும்.
          ஆனால் இந்தியாவின் இரண்டாவது நிலையை பார்த்தோமென்றால், மேல்கண்ட வளர்ச்சியின் வேகம் சறுக்கு மரமாய் இறங்கி கொண்டிருக்கிறது.  வறுமையிலும், அநீதிகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மற்றொரு முகமாய் விளங்குகிறது இந்தியா. இந்த இணைய யுகத்தில், நம் இந்தியாவில் இருக்கும் 120 கோடியை தாண்டிய மக்களில் 75 கோடி பேர் மட்டும் தான் இந்தியாவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் ஊதியத்திற்காக வெளிநாடுகளில் உழைத்து வருகின்றனர். இருக்கும் இந்திய மக்களில் பலர் கணினியை கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், வளர்ச்சியின் சாரம் அவர்களை இன்னும் முழுமையாக சென்றடையாததுதான்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லும் இதே இந்தியாவில் தான், தெருவில் குடை பிடித்து, காலில் செருப்பு அணித்து, தோளில் துண்டு போட்டுக் கொண்டு போக கூட அனுமதி மறுக்கப்பட்டவர்கள், வாழும் கிராமங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நகரங்களைக் களைந்து கொண்டு கிராமங்களுக்குள் சென்று பார்த்தோமானால்  இந்த நிலை, இந்த அவலம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சட்டப் பூர்வமான பாதுகாப்புகள் பல (காவல் நிலையம், நீதி மன்றங்கள்) இருந்தும் என்ன பயன்..? பொருளாதாரச் சுரண்டல்களும், ஜாதியில் பெயரால் இழைக்கப் படும் இன்னல்களும், அநீதிகளும், வர்க்கப் பிரிவுகளும், பால் பேதங்களும், அழிக்கவே முடியாமல் இருக்கும் லஞ்ச ஊழல்களும், மனிதனை மனிதனாய் பார்க்காமல், அவரவர்களின் தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொள்ள முற்படும் அயோக்கியத் தன்மையும் நிறைந்து கிடக்கம் இதே நவீன இந்தியாவின் கோரப்பிடியில் சிக்குண்டு வாழும் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். இதோடு உலகில் ஊட்டச்சத்துக் குறைவோடு பிறக்கும்  குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான் பிறக்கின்றன என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும் 25 கோடி மக்களில் 50 லட்சம் பேர் குழந்தைகள். நாளுக்கு நாள் இந்த பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்துக் கொண்டே போகிறது.     
          இது போன்ற சிறு சிறு நிகழ்வுகள் மட்டும் தான் எனக்குத் தெரிந்தவை. எனினும் எனக்குத் தெரியாத உங்களுக்கெல்லாம் தெரிந்தவை நிறைய இருக்கலாம். இது போன்ற அநியாயங்கள், வறுமைகள் ஒழிய நம்மை போன்ற படித்தவர்களும், வெளி உலகம் தெரிந்தவர்களும் என்ன செய்தோம்..? தத்தம் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே முனைவதில் ஆர்வம் காட்டுகிறோம். பொதுநலம் பாராட்டாது சுயநலம் மட்டுமே பாவிக்கிறோம். “வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நாடு” என்று வாய்கூசாமல் மட்டும் பெருமை பிதற்றிக் கொண்டிருக்கிறோம்... அவ்வளவுதான் நாம் நாட்டுக்கு செய்தது. 
அடிப்படையாக சிந்தித்துப் பார்த்தாலே போதுமே... மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டு முன்னேறி இருக்க வேண்டும் என்பது வெளிப்படியாகப் புரியும். அதற்க்கு முதலில் ஜாதியைத்தான் ஒழிக்க வேண்டும். அந்த ஒரு வைரஸ் தான் நம் நாட்டின் ஒட்டு மொத்த ஏழ்மைக்கும் அடிப்படைக் காரணமாய் இருக்கும் என்பது எனது கருத்து. அந்த ஜாதி வைரஸில் இருந்துதான் லஞ்சம், ஊழல், புரட்டு, மோசடி போன்ற எல்லா தோற்று வியாதிகளும் உருவாகி இருக்கும். நம் முதல் கட்ட நடவடிக்கை ஜாதி என்ற ஒன்றே இல்லாமல் அழிக்க வேண்டியதுதான் 

அடுத்தது, ஆளாளுக்கு கட்டுரை எழுதி, வசனம் பேசி மட்டுமே வருகிறோமே ஒழிய மற்ற நாடுகளை விட நம் நாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் இல்லை... இந்த  இரு நிலைகளில் இருந்து மாறி, செழிப்பு மிக்க நாடாக நம் நாடு முன்னேறிவர,  நம் நாட்டின் இந்த ஏழ்மை மற்றும் அவல நிலை பற்றி தெரிந்தவர்கள்தாம்,  தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு  நாளின் அரை பாதியை, ஒவ்வொருவரும் செலவிட்டாலும் கூட  இன்னும் சில வருடங்களில்   இந்தியா வல்லரசு என்ன பொன்னரசு கொண்ட நாடாகத் திகழும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. முடிந்த அளவு படித்தவர்கள் இதை கையில் எடுத்தால், நிச்சயம் நம்முடைய தலைமுறையிலேயே இந்தியாவை பெருமை மிக்க நாடாகக் காண்போம் என்பது முற்றிலும் உண்மையாய் நிலைத்து விடும்… பார்க்கலாம்... இந்த கட்டுரையைப் படித்து விட்டு எத்தனை இள ரத்தம் சூடாகிறது என்று....?

Friday, 26 October 2012

Lucas TVS...               "மயிலிறகால் வருடுவது போல்" என்பதற்கு ஏற்ப உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வைக் களைப்பு, மன சோர்வு நீங்க புத்துணர்ச்சி தருவாதாய் அமைந்துள்ளது லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் சுற்றுப் புற சூழல்... ஆயுத பூஜையினை முன்னிட்டு அந்த நிறுவனத்தினை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு தோழர் ஒருவரின் மூலமாய் எனக்கு கிட்டியது... 

    
            இயந்திரங்களின் சப்தங்களுக்கு இடையில், சென்னை போக்குவரத்து சப்தங்களின் கூடாரங்களுக்குள் நிம்மதியாய் எப்படி வேலை பார்க்க முடியும்? என்று எண்ணிய என் சிந்தனையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது அந்த நிறுவனம்.. அழகிய சூழல், ரம்மியமான காற்றும் குயில்களின் மெல்லிய குரலும் என்னை முழுவதுமாய் ஈர்த்ததில் லயித்துப் போய்விட்டேன்.... 

            அந்த தொழிற்சாலையின் முகப்பில் இருந்த கூடத்தில் அதன் வரலாறும், அந்த தொழிற்சாலை தன் தரத்திற்காக பெற்ற கேடயங்கள் வரிசையாகவும், முறையாகவும் அடுக்கப் பட்டிருந்தன.. ஒவ்வொன்றையும் படித்தேன்... ரசித்தேன்... 

           தொழிலாளர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் வகையில் ஆயுத பூஜைக்கான சிறப்பு பரிசுகள் தரப்பட்டது. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், தொழிலாளர்களின் உணர்வையும், மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டே அந்த நிறுவனம் எழில் பொங்கும் சூழலை அமைத்ததுதான்... தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விளங்கும் அந்த நிறுவனத்தின் தரமும் நிச்சயம் மேலோங்கியே இருக்கும் என்பது வெளிப்படையான உண்மையே... 

             மனம் முழுக்க அந்த சூழலையும், பணியாளர்களின் தேனீ சுறுசுறுப்பையும் ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியுடனே வெளியேறினேன், தமிழ் நாட்டில் சிறப்புடன் விளங்கும் இந்த நிறுவனம் மேலும் உலகத்தர சான்றிதழ்கள் பல பெற்று புகழின் கேடயத்தை தன்னுள் நிலைநிறுத்தி நிலையாய் வைத்திருக்கும் என்று...

இந்த கொடுமையைப் பாருங்கள்...


                                                                                                
பெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப்படங்களை அவமதித்த அ.தி.மு.க சட்டமன்ற குழுவினர்! தமிழ் நாட்டின் திருட்டுக் கூட்டம் செய்த அழிச்சாட்டியத்தைப் பாருங்கள்... இவ்வளவு முட்டாள்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து விட்டனர் இந்த கூட்டத்தார்.... இதில் இருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்கள்தான் கட்சிக் காட்டு மிராண்டிகள் என்பது... கீழே தரப்பட்டிருக்கும் இணைப்பை படித்து பார்த்து இந்த அக்கிரமத்தை தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே...                                 
      


    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=84605

பெஞ்சமின் பிராங்க்ளின்


           பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால், சகுனம் என்று கருதலாம்.                                                                                   அப்படிக் கருதினால் நீங்கள் மனிதனல்ல, சுண்டெலி...
                                                       = பெஞ்சமின் பிராங்க்ளின்நம்பிக்கை

ஓட்டை படகும்
உடைந்த துடுப்பும் கொண்டு
கடல் போல் நம்பிக்கை இருந்தால்
எளிதால் கடக்கலாம்...மிகப் பெரிய தைரியம்

உலகத்திலேயே மிகப் பெரிய தைரியம் என்ன தெரியுமா..? தைரியசாலிப் போல் நடிப்பதுதான் - வின்ஸ்டன் சர்ச்சில்...

Thursday, 25 October 2012

அமெரிக்காவை கண்டறிந்தது கொலம்பஸா...?


                       அமெரிக்காவை கண்டறிந்தது கொலம்பஸ் அல்ல.. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா..? இருங்கள் இருங்கள்.. இந்த வரலாறை முழுமையாக படித்து விட்டு தெரிந்து கொள்ளுங்கள்...

                       மார்க்கோபோலோவின் பயணக்குறிப்பை வாசித்த கொலம்பஸ் கடற்பயணம் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த காலத்தில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே வாணிகம் தரை வழியாக தான் நடைபெற்றது. எனவே, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு கடல் வழி கண்டறியும் தேவை ஏற்பட்
டதால் மேற்கு திசையில் கடற்பயணம் செய்து இந்தியாவிற்கு செல்வதைக் குறிக்கோளாக கொண்டிருந்தார். 

                     கி.பி. 1492 இல் ஸ்பெயின் மன்னரின் ஆதரவு பெற்று "சாந்தாமரியா" என்ற கப்பலில் பயணம் மேற்கொண்டார். 50 நாட்கள் பயணத்திற்குப் பிறகு வடஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மேற்கு இந்திய தீவுகளை வந்தடைந்தார். இவற்றை "இந்தியத் தீவுகள்" என்று கொலம்பஸ் எண்ணினார். அப்பகுதி மக்களை "செவ்விந்தியர்கள்" என்றும் கருதினார்.

                    இவருக்குப் பின்தான் கி.பி. 1520 இல் கடற்பயணம் மேற்கொண்ட "அமெரிக்கோ வெஸ்புகி" என்பவர் கொலம்பஸ் கண்டறிந்தது இந்தியப் பகுதி அன்று. அது ஒரு புதிய நிலப்பகுதி என்று கூறினார். எனவே அப்பகுதி அவர் பெயரால் "அமெரிக்கா" என்று பெயரிடப்பட்டது. இப்ப சொல்லுங்க... அமெரிக்காவை கண்டறிந்தது யார்...?

Monday, 22 October 2012

கொடுங்கோல் துரோகி...
இரக்கத்தை புதைத்து
மனசாட்சி அறுத்து
எம் இன மக்களைக் கொன்று
அழிவினைப் போற்றிய
கொடுங்கோல் துரோகி
ராஜ பக்சேவே...
உன்னை வரவேற்ற
வஞ்சகர்களையும்,
உன் புகழ் பாடும்
பொய்யானவர்களையும்,
உன்னை சார்ந்த
அயோக்கியர்களையும்
வெட்டி வீழ்த்த
ஆயுதங்களை விட
எங்களின் வார்த்தையின்
கூர்மையே போதுமடா...
அடுத்த முறை உன் காலடிபட்டால்
பிறக்க இருக்கும் ஒவ்வொரு
தமிழனின் குழந்தையும்
உன் இறப்பை
தீர்மானித்துவிடும்........

உருவாக்கிக் காட்டுவோம் புரட்சிகரமான சமூகத்தை ...

இன்றுவரை 
அழியாமலே இருக்கும் ஜாதியும்
இப்பொழுதுவரை 
ஒழியாமலே இருக்கும் லஞ்சமும்
குறை பேசியே

முன்வரமால் இருக்கும் சமூகமும்
முற்றிலுமாய்
தொலைந்துபோய்விட்டாலே
நம் நாடு முழுமையான
வல்லரசு நாடுதான்...
அதற்கான வழி
நம் ஒவ்வொருவரின்
வீறு கொண்டெழும்
சமூக சிந்தனையே..
ஒன்று படுவோம்..
நம்மால்தான்
இந்த சமூகம்
புதிதாய் தோன்றும் என்றால்
உருவாக்கிக் காட்டுவோம்
புரட்சிகரமான சமூகத்தை ...

முழு வெற்றி... "சாட்டை"

திரும்பவே செல்ல முடியாது என்று இருந்த பள்ளி நினைவுகளுக்கு மீண்டும் நம்மை இழுத்து சென்ற ஒரு ஆழமான அழகிய கதைக்கரு கொண்ட எளிமையான படம் சாட்டை. மாணவர்களின் குண நலன்களையும், ஆசிரியர்கள் கைக்கொள்ள வேண்டிய வழிமுறையும் எடுத்துச் சொல்லி, அதனூடே மாணவப் பருவத்துக் காதலையும், பெற்றவர்களின் மன நிலையையும், நடை முறை வாழ்க்கையின் சாரம்சத்தை சிறப்புறவும் எடுத்துச் சொல்லிய நல்ல படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். சகாயனே.. சகாயானே பாடல் மனதை வருடிக் கொடுத்த படியே இருக்கின்றது இக்கணம் வரை.... பிரபு சாலமன், சமுத்திரக் கனி, யுகபாரதி ஆகியோரின் கூட்டமைப்பிற்கு கிடைத்த முழு வெற்றி... "சாட்டை"
= ஆனால் நமது தொலைகாட்சி சேனல்களில் இந்த மாதிரி படங்களுக்கு மட்டும், திரைப்படங்களின் தரத்தை மதிப்பீடு செய்யும் நிகழ்சிகளில் முதல் இடம் தர யோசிக்கின்றனர். நல்ல கதைக் கரு உள்ள படத்தை விட, பிரபலங்கள் நடித்து இருந்தாலும் மொக்கையா இருக்கும் படத்திற்கு அதிக விளம்பரம் கொடுத்திருப்பதால் முதல் இடமும் அதற்க்கு அடுத்த இடத்தையும் எப்பவுமே தக்க வைத்து இருக்கின்றனர். படத்தின் கதைக்கருவைக் காட்டிலும் பணத்திற்கே முதலிடமா இந்த சினிமாவில்...?

ஆனந்தம்தான்...ஆனந்தம்தான்...
மறுக்கவில்லை...
மறக்கவில்லை...
வீறு கொண்ட உன் நடைக்கு
பெரும் பேறாய்

இணையாக நானும் நடந்து
என்னை அறியாமல்
உன்னை ரசித்துக் கொண்டிருக்கையில்
உரசிய காற்று
பெரு மூச்சு விட்டு
உன்னையும் என்னையும் அணைத்தபடியே
தழுவி சென்றதை...

அடக்கிவிடுகிறேன் அடிக்கடி என்னுள்...
அளவளாவும் நேரம்...
யாருமில்லா தருணம்...
நான் உன் ஓரம்...
எவ்வளவு அருமையான
காதல் செய்ய ஏற்ற ஒரு சூழல்...!!
சிறு கோபத்தில்
உன்னை பார்த்த
என் விழி மறுத்து
வேறெங்கோ கவனம் செலுத்தி
நான் திரும்பும் தருணங்களில்
எனை ரசிக்க எத்தனிக்கிறாயே...
திமிர் பிடித்த காதலனே..
எத்தனை வீராப்பு உன்னுள்...
அடக்கிவிடுகிறேன் அடிக்கடி என்னுள்...

Thursday, 18 October 2012

கோலமாக...


விடியற்காலை
வெளுத்ததோ இல்லையோ..
வாசல் கடந்து செல்லும்
அவனைக் காண
வாசலிலே தவம்
கிடக்கிறேன் கோலமாக...

Friday, 5 October 2012

பாழாய்ப் போன அந்த ஜாதி...காதல்...
தொடவில்லை இன்னும்...

காலத்தின்
வசீகரிப்பில் வளைந்து
அதன் போக்கில்
போய்க் கொண்டிருந்தவளை
சுண்டி இழுத்த
சண்டித்தனம் கொண்ட காளை
அவனிடம்
தொட்டது காதல்..
அரும்பாய் மலர்ந்து
பூவாய் விரிந்து
தேனாய் சேர்ந்த
அன்பினில்
நீ என்ன ஜாதி என்றும்
நான் என்ன குலம் என்றும்
மறந்து விட்டிருந்தாள்...
ஓன்று மட்டும்
உறுதி கொண்திருந்தாள்...
தம் காதலுக்கு
எதிரிகள் பல உண்டென்று...
"நீ என்னுள் மூழ்கி
நான் உன்னுள் கலந்து
வாழ ஆரம்பித்த நம்மை
வாழக்கூடாது சேர்ந்து
என்று கங்கணம் கட்டியது
என் பெற்றோர்களே..."
என அவனிடம் ஓர் இரவில்
கண்ணீர் சொரிந்தாள்...
காலில் விழுந்து 
"கெளரவம் காப்பாற்று" என
கையேந்தியவர்களையும்,
அடித்து துன்புறுத்தி
காதலை அறுத்தெறிந்துவிடு
என்று எச்சரித்தவர்களையும்
அவர்தம் நிலைகண்டு புன்முறுவல்
பூப்பதைத் தவிர
வேதனையை வெளிக்காட்டுவதில்
விருப்பம் இல்லை..

சுய கெளரவத்தையும்
காட்டுமிராண்டி ஜாதியையும்
விட்டுக் கொடுக்காதவர்கள்....

இவர்கள் ரத்தத்தில் வளர்ந்த நான்
என் காதலை விட்டுக் கொடுத்தல் தகுமோ..."
என்று ஆற்றாமையுடன் கண்ணீர் சொரிந்தாள்
தன் காதலனிடம்...

வாழ்ந்து முடித்த அவர்கள்
வாழத் தொடங்கிய அந்த காதலர்களை
பிரிவுக்கு ஆளாக்குவது தகுமோ...
அதன் தாக்கத்தில்
கோழையாய் முடிவெடுத்தாள்
மரணத்தில் பயணிப்பது என்று...
அவளின் முடிவினால்
வென்றது வேறு யாருமில்லை..
பாழாய்ப் போன அந்த ஜாதிதான்...
ஜாதியை வேரறுக்க வேண்டிய அவள்
இப்பொழுது மரண தேசத்தில்...

(புதுகையில் நடந்த ஒரு காதலின் வலி..)

Wednesday, 3 October 2012

சிதைந்து கொண்டிருக்கிறேன்...


கர்ப்பத்தில் தங்கி
கலங்கியதில்
சிதைந்து போன
கருவாய்,
என் தளபதியின்
கலங்கிப் போன 
குரலில்,
மறைந்து போன 
அவன் நினைவில்
நானும் 
சிதைந்து 
கொண்டிருக்கிறேன்...

Tuesday, 2 October 2012

சிட்டாய் பறந்த கருவாச்சி...


Photo: சிட்டாய் பறந்த
இந்த கருவாச்சி
சிறகொடிந்தவலாய்
சிதைந்து கொண்டிருக்கிறாள்
இனம்புரியா
கவலை சூழ்ந்த
நிம்மதியற்ற மனதோடு
எதிர் காலத்தை
அசை போட்டுக் கொண்டே.....சிட்டாய் பறந்த
இந்த கருவாச்சி
சிறகொடிந்தவலாய்
சிதைந்து கொண்டிருக்கிறாள்
இனம்புரியா
கவலை சூழ்ந்த
நிம்மதியற்ற மனதோடு
எதிர் காலத்தை
அசை போட்டுக் கொண்டே.....

நீ வரும் திசை நோக்கி....
வளைந்து நெளிந்து 
செல்லும் பாதையும்
நேர்வழியை தேடி
ஓடியது 
உன்னைக் காணவேண்டி
நீ வரும் திசை நோக்கி....

மீசைமுடி...

புள்ளி வைத்த கோலம் 
ரங்கோலமானது
முறுக்கி வளைந்த
உன் மீசைமுடி
வளைவினை
ரசித்துக்கொண்டிருந்த 
விடியலில்...

திமிர் கொண்ட காதலன்...

விட்டுக் கொடுக்காமலும்
மன்னிப்பு கேட்காமலும்
அழ வைக்காமலும்
துடிப்பதை வெளிக்காட்டாமலும் 
பாசத்தை மட்டுமே கொட்டிக் காட்டும் 
திமிர் கொண்ட காதலனே
என் இயற்கைக் காதலன்....