அமெரிக்காவை கண்டறிந்தது கொலம்பஸ் அல்ல.. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா..? இருங்கள் இருங்கள்.. இந்த வரலாறை முழுமையாக படித்து விட்டு தெரிந்து கொள்ளுங்கள்...
மார்க்கோபோலோவின் பயணக்குறிப்பை வாசித்த கொலம்பஸ் கடற்பயணம் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த காலத்தில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே வாணிகம் தரை வழியாக தான் நடைபெற்றது. எனவே, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு கடல் வழி கண்டறியும் தேவை ஏற்பட்டதால் மேற்கு திசையில் கடற்பயணம் செய்து இந்தியாவிற்கு செல்வதைக் குறிக்கோளாக கொண்டிருந்தார்.
கி.பி. 1492 இல் ஸ்பெயின் மன்னரின் ஆதரவு பெற்று "சாந்தாமரியா" என்ற கப்பலில் பயணம் மேற்கொண்டார். 50 நாட்கள் பயணத்திற்குப் பிறகு வடஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மேற்கு இந்திய தீவுகளை வந்தடைந்தார். இவற்றை "இந்தியத் தீவுகள்" என்று கொலம்பஸ் எண்ணினார். அப்பகுதி மக்களை "செவ்விந்தியர்கள்" என்றும் கருதினார்.
இவருக்குப் பின்தான் கி.பி. 1520 இல் கடற்பயணம் மேற்கொண்ட "அமெரிக்கோ
வெஸ்புகி" என்பவர் கொலம்பஸ் கண்டறிந்தது இந்தியப் பகுதி அன்று. அது ஒரு
புதிய நிலப்பகுதி என்று கூறினார். எனவே அப்பகுதி அவர் பெயரால் "அமெரிக்கா"
என்று பெயரிடப்பட்டது. இப்ப சொல்லுங்க... அமெரிக்காவை கண்டறிந்தது யார்...?
No comments:
Post a Comment