Friday 26 October 2012

Lucas TVS...



               "மயிலிறகால் வருடுவது போல்" என்பதற்கு ஏற்ப உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வைக் களைப்பு, மன சோர்வு நீங்க புத்துணர்ச்சி தருவாதாய் அமைந்துள்ளது லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் சுற்றுப் புற சூழல்... ஆயுத பூஜையினை முன்னிட்டு அந்த நிறுவனத்தினை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு தோழர் ஒருவரின் மூலமாய் எனக்கு கிட்டியது... 

    
            இயந்திரங்களின் சப்தங்களுக்கு இடையில், சென்னை போக்குவரத்து சப்தங்களின் கூடாரங்களுக்குள் நிம்மதியாய் எப்படி வேலை பார்க்க முடியும்? என்று எண்ணிய என் சிந்தனையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது அந்த நிறுவனம்.. அழகிய சூழல், ரம்மியமான காற்றும் குயில்களின் மெல்லிய குரலும் என்னை முழுவதுமாய் ஈர்த்ததில் லயித்துப் போய்விட்டேன்.... 

            அந்த தொழிற்சாலையின் முகப்பில் இருந்த கூடத்தில் அதன் வரலாறும், அந்த தொழிற்சாலை தன் தரத்திற்காக பெற்ற கேடயங்கள் வரிசையாகவும், முறையாகவும் அடுக்கப் பட்டிருந்தன.. ஒவ்வொன்றையும் படித்தேன்... ரசித்தேன்... 

           தொழிலாளர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் வகையில் ஆயுத பூஜைக்கான சிறப்பு பரிசுகள் தரப்பட்டது. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், தொழிலாளர்களின் உணர்வையும், மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டே அந்த நிறுவனம் எழில் பொங்கும் சூழலை அமைத்ததுதான்... தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விளங்கும் அந்த நிறுவனத்தின் தரமும் நிச்சயம் மேலோங்கியே இருக்கும் என்பது வெளிப்படையான உண்மையே... 

             மனம் முழுக்க அந்த சூழலையும், பணியாளர்களின் தேனீ சுறுசுறுப்பையும் ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியுடனே வெளியேறினேன், தமிழ் நாட்டில் சிறப்புடன் விளங்கும் இந்த நிறுவனம் மேலும் உலகத்தர சான்றிதழ்கள் பல பெற்று புகழின் கேடயத்தை தன்னுள் நிலைநிறுத்தி நிலையாய் வைத்திருக்கும் என்று...

1 comment: