Monday, 29 October 2012

செயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி...





            செயற்கை நுரையீரல் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஆய்வுக்கூடத்தில் நுரையீரலை உருவாக்கி நோயாளிக்கு பொருத்திவிட முடியும்.

வேர் செல்கள் எனும் மூல செல்கள் நம் உடலின் பல்வேறு பாகங்களில் உள்ளன. இந்த செல்களிலிருந்து நம் உடலில் செயல்படும் பல்வேறு உறுப்புகளின் செல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது நுரையீரலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லிருந்து நுரையீரலை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதற்கு முன்பு மனித உறுப்புகளை குளோனிங் குழந்தை முறையில் பெறும் முயற்சி நடந்தன. குழந்தையை வளர்ப்பதற்குப் பதிலாக குறிப்பிட்ட உறுப்பை வளர்க்கும் அம்முறைக்கு தற்போது உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வேர்ச்செல்களிலிருந்து திசு வளர்ப்பு முறைதான் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் எளிமையான முறை என்று விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார்கள்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நுரையீரல் திசு வளர்க்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரி செய்யவும் இந்த ஆய்வு உதவும்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

No comments:

Post a Comment