Wednesday, 31 October 2012

இரவில் மலர்ந்த காதல்....

ஒளி தெரியாத
ஒலி கேட்காத
காரிருளில்
தனிமையை போர்த்திக் கொண்டு
இனிமையாய் ரசித்துக் கொண்டிருந்தேன்
அந்த அமைதிப் பொழுதை...
சண்டை போடும் காற்றும்,
காற்றுக்கு சாமரம் வீசும்
மரங்களும்,
திருட்டுத் தனமாய்
இருட்டை அணைத்த
மழை சாரலும்,
என்னை தழுவிய
குளிர் கோவலனும்,
யாருமில்லா அந்த அறையுள்
மெய் மறைக்கச் செய்தன என்னை...
இந்த பொழுது இப்படியே அமைதியில்
அடங்கி விட்டால்
என் மகிழ்ச்சி நீடிக்கும் என்றெண்ணி
சுயநலப் பட்ட என்னை
மௌனமாய் வந்து கலைத்தது
காதலனின் அழைப்பு...
பொங்கிய இயற்கையின் வாசத்துடன்
காதலின் குரலில்
கசிந்து கொண்டிருந்தேன்
இயற்கையின் வர்ணனை விளக்கிக் கொண்டே...
விடியலுக்கு செல்ல
உறக்கம் என்னை துரத்தியது....
மெல்ல மெல்ல
கண்ணயர்ந்தேன்...
இயற்கையின் அழகை ரசித்தவாறே

இரவில் மலர்ந்த காதலோடு ....

No comments:

Post a Comment