Friday, 5 October 2012

பாழாய்ப் போன அந்த ஜாதி...



காதல்...
தொடவில்லை இன்னும்...

காலத்தின்
வசீகரிப்பில் வளைந்து
அதன் போக்கில்
போய்க் கொண்டிருந்தவளை
சுண்டி இழுத்த
சண்டித்தனம் கொண்ட காளை
அவனிடம்
தொட்டது காதல்..
அரும்பாய் மலர்ந்து
பூவாய் விரிந்து
தேனாய் சேர்ந்த
அன்பினில்
நீ என்ன ஜாதி என்றும்
நான் என்ன குலம் என்றும்
மறந்து விட்டிருந்தாள்...
ஓன்று மட்டும்
உறுதி கொண்திருந்தாள்...
தம் காதலுக்கு
எதிரிகள் பல உண்டென்று...
"நீ என்னுள் மூழ்கி
நான் உன்னுள் கலந்து
வாழ ஆரம்பித்த நம்மை
வாழக்கூடாது சேர்ந்து
என்று கங்கணம் கட்டியது
என் பெற்றோர்களே..."
என அவனிடம் ஓர் இரவில்
கண்ணீர் சொரிந்தாள்...
காலில் விழுந்து 
"கெளரவம் காப்பாற்று" என
கையேந்தியவர்களையும்,
அடித்து துன்புறுத்தி
காதலை அறுத்தெறிந்துவிடு
என்று எச்சரித்தவர்களையும்
அவர்தம் நிலைகண்டு புன்முறுவல்
பூப்பதைத் தவிர
வேதனையை வெளிக்காட்டுவதில்
விருப்பம் இல்லை..

சுய கெளரவத்தையும்
காட்டுமிராண்டி ஜாதியையும்
விட்டுக் கொடுக்காதவர்கள்....

இவர்கள் ரத்தத்தில் வளர்ந்த நான்
என் காதலை விட்டுக் கொடுத்தல் தகுமோ..."
என்று ஆற்றாமையுடன் கண்ணீர் சொரிந்தாள்
தன் காதலனிடம்...

வாழ்ந்து முடித்த அவர்கள்
வாழத் தொடங்கிய அந்த காதலர்களை
பிரிவுக்கு ஆளாக்குவது தகுமோ...
அதன் தாக்கத்தில்
கோழையாய் முடிவெடுத்தாள்
மரணத்தில் பயணிப்பது என்று...
அவளின் முடிவினால்
வென்றது வேறு யாருமில்லை..
பாழாய்ப் போன அந்த ஜாதிதான்...
ஜாதியை வேரறுக்க வேண்டிய அவள்
இப்பொழுது மரண தேசத்தில்...

(புதுகையில் நடந்த ஒரு காதலின் வலி..)

1 comment:

  1. வழி இருக்கு வலிக்காமல் இருக்க....ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறாய் கருவாச்சி...

    ReplyDelete