அரைத்த சந்தானம்
அயர்ந்து போவதற்குள்
எதார்த்தமாய்
எழுதிவிட்டாயே
என் முகத்தில் பூசி...
என் கோபம் ரசிக்க
தூரம் போன
உன் திமிர் முகம் காண
எத்தனித்தேன்...
சென்று விட்டாய்...
மனம் முழுக்க
காதலோடு நீ தொட்ட
சந்தனக் கன்னத்தில்
நானும் தொட்டு
ரசித்துக் கொண்டிருந்தேன்...
களவாணித் தனமாய்....
No comments:
Post a Comment