திரும்பவே
செல்ல முடியாது என்று இருந்த பள்ளி நினைவுகளுக்கு மீண்டும் நம்மை இழுத்து
சென்ற ஒரு ஆழமான அழகிய கதைக்கரு கொண்ட எளிமையான படம் சாட்டை. மாணவர்களின்
குண நலன்களையும், ஆசிரியர்கள் கைக்கொள்ள வேண்டிய வழிமுறையும் எடுத்துச்
சொல்லி, அதனூடே மாணவப் பருவத்துக் காதலையும், பெற்றவர்களின் மன நிலையையும்,
நடை முறை வாழ்க்கையின் சாரம்சத்தை சிறப்புறவும் எடுத்துச் சொல்லிய நல்ல
படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். சகாயனே.. சகாயானே பாடல்
மனதை வருடிக் கொடுத்த படியே இருக்கின்றது இக்கணம் வரை.... பிரபு சாலமன்,
சமுத்திரக் கனி, யுகபாரதி ஆகியோரின் கூட்டமைப்பிற்கு கிடைத்த முழு
வெற்றி... "சாட்டை" —
= ஆனால்
நமது தொலைகாட்சி சேனல்களில் இந்த மாதிரி படங்களுக்கு மட்டும்,
திரைப்படங்களின் தரத்தை மதிப்பீடு செய்யும் நிகழ்சிகளில் முதல் இடம் தர
யோசிக்கின்றனர். நல்ல கதைக் கரு உள்ள படத்தை விட, பிரபலங்கள் நடித்து
இருந்தாலும் மொக்கையா இருக்கும் படத்திற்கு அதிக விளம்பரம்
கொடுத்திருப்பதால் முதல் இடமும் அதற்க்கு அடுத்த இடத்தையும் எப்பவுமே தக்க
வைத்து இருக்கின்றனர். படத்தின் கதைக்கருவைக் காட்டிலும் பணத்திற்கே
முதலிடமா இந்த சினிமாவில்...?
No comments:
Post a Comment