பசலைநோய் காதலியும் வெற்றி வாகை சூடி வந்த தலைவனும்...
அவள் நாணி தலை சாய்ந்தாள்...
ஆஜானுபாகுவான ஆடவனின் அரவணைப்பால்...
இனியாளின் இடை அழகு கண்டு
ஈசனும் சொக்கித்தான் போனான்...
உள்ளங்கள் இரண்டும் கசிந்துருகிய வேளையில்
ஊற்றெடுத்து பெருகித் திளைத்த அன்பில்
எதிர்பாரா தருணத்தில் இதழ் பதித்தான் கன்னத்தில்...
ஏக்கம் தீர்த்த தலைவனை நோக்கிய தலைவி
ஐயமும் சோகமும் கலந்த குரலில்
ஒருகணமும் நீர் எனை நீங்கினால் மறுகணம் செல்வேன் மண்ணுலகம் என
ஓர விழியில் நீர் கசிந்தால் அந்த ஆரணங்கு....
ஒளடதம் கொடுத்து நங்கையின் பசலை நோயின் பிணி தீர்த்தான் இள வேங்கை...
இதல்லவோ காவியக் காதல்...

அழகாக உயிரான காதலை உயிரெழுத்துக்களை கோர்த்து எழுதியுள்ளீர்கள். அருமை
ReplyDeleteNandri...
ReplyDelete