காசு, பணத்துக்கு
கஷ்டப்பட்டு
கழனியெல்லாம் நீறேரச்சு,
நாத்துகளை நட்டுப்போட்டோம்...
மனசறிஞ்சு முளைச்ச
பயிரெல்லாம்
முத்து முத்தா நெல்லாவி
கரையெங்கும் பசும்பச்சை,
கண்ணுக்கெதமா குளிர
எங்க மனசெல்லாம்
இப்ப இன்ப மழைதான்....
பின்ன அறுவடைக்கு ஆள்புடிச்சு
காத்திருந்து காத்திருந்து,
குடும்பமா சேந்து,
சின்னஞ் சிறுசும்
ஒத்தாவிச்சு அருப்புநாளில....
இருகரு கர்ப்பிணி யானையாய்
கட்டெல்லாம் கனம் காண
தூக்கமாட்டாம தூக்கி,
களத்துமேடு சேத்து,
அலுப்புமறைய பாட்டுபடிச்சு,
பதறெடுத்து சக்கையில செஞ்சோம்
வைக்கபோரு...
நெல்லுமணி கண்சிமிட்ட
படிப்படியா அளந்தெடுத்து
கூலிபோக கொடுத்தனுப்பி
பொடச்செடுத்த பச்சரியில
பொறந்தபுள்ள முகம்கண்டோம்....
தமிழன் பரம்பரையில
வந்தவங்க நாங்க...
நாலெழுத்து படிச்சதில்லை....
தெரிஞ்சதெல்லாம்
பகுத்தறிவு பாசமும்
மனிதநேய மனசும்
சுயமரியாதையோட
சமத்துவ சமரசமா
வாழுறோம் நாங்க....
எங்க பரம்பரையில வந்த தமிழ் புத்தாண்டே....
ஒன்ன வரவேற்க
புது உடுப்பு போட்டு
பொங்க பானையில
பச்சரிசி புதுசு போட்டு
எழுப்பிடுவோம்
சோம்பல் முறிக்கும் கதிரவனை
"பொங்கலோ பொங்கல்"
குலவையிட்டு...
கவிதை அருமை.பாராட்டுகள்.
ReplyDelete