பொது விஷயம் பேசுறது, அறிவார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வது இயல்பு. நமது உடலுக்குள்ளே ஒரு அறிவு விந்தை ஒளிந்திருப்பது நம்முள் பலருக்கு அறியாத அரிய தகவலே... இதோ... உங்கள் பார்வைக்கு சில....
- நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
- நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
- நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
- பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
- நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நம்மில் பலர் "உனக்கு கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? " அப்டினுதான் கோபத்தில் திட்டுவாங்க ஆனால் அந்த மூளையைப் பற்றிய தகவல்கள் அறிய முற்படுவதில்லை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் நம் மூளையை பற்றி...
- மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
- ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
- நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
- நமது மூளை 80% நீரால் ஆனது.
- நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது கண்கள் :-
கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
அபூர்வ உடலைப் பற்றிய அறிய தகவல்கள் தந்து உதவிய கீற்று வலைதளத்திற்கு நன்றிகள் பல....
No comments:
Post a Comment