கருப்பு வண்ண சேலை கணுக்கால்வரைக் கட்டி,
முகச் சாயம் நீக்கி,
கரும் மை கண்ணில் இட்டு,
கை வளையல் குலுக்கி,
ஒற்றைத் தூக்கு வாளியிலே
என் மச்சானுக்கு கஞ்சி
கொண்டு போகையிலே,
வழிநெடுகிலும் அவன் முகமே...
வியர்வை துடைத்து
அருகில் வந்து
"என்னடி கருவாச்சி..."
என்று கொஞ்சம் தெரிந்த
இடுப்பினிலே "நறுக்" என கிள்ளிட்டான்...
கஞ்சி குடித்தவனை
ரசித்துக் கொண்டிருந்த
அற்புதமான தருணத்தில்,
எதிர்பாரா நொடியில்,
கஞ்சியோடு சேர்த்து இதழ் முத்தம் ஒன்றை பதித்திட்டான் ...
கஞ்சியும் அமிர்தமாய்
என் இதழில்....
கருவாச்சி......அருமை..
ReplyDeleteநன்றி கோவை
ReplyDelete