சமுதாயத்தின் எழுச்சியும், நாட்டின் வளர்ச்சியும் வளரும் இளந்தலை முறையினரின் கையிலே உள்ளது. அவர்களைப் பக்குவமடையச் செய்வதில் ஆசிரியரின் பணி இன்றி அமையாதது. எனினும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆசிரியர் பெற்றோரே... அவர்களுக்கு அடுத்து முக்கியப் பங்கு வகிப்பது ஆசிரியரே. தன் வீட்டை விட பள்ளியிலே அதிக நேரம் செலவிடுகின்றனர் வளரும் பருவத்தினர். அவர்களின் அறிவினைப் பெருக்கம் அடையச் செய்து நல்ல திறமைசாலியாக செதுக்குவதில் ஆசிரியர்களுக்கு இணை ஆசிரியர்களே...
கற்றறிந்த அறிஞர்கள் பலரை விட ஒரு ஆசிரியரால் மட்டுமே ஒரு சமூகத்தினருக்கு கருத்துக்களை விரைவில் கொண்டு செல்லும் வல்லமை உள்ளது. எனவே இந்நாளில் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
நல்ல பகிர்வு...ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி கோவை....
ReplyDelete