Thursday 25 April 2013

தீண்டளுக்குரியவன் ...








நிலவின் பிரகாசத்தின் 
கூட்டுக்குள் 

அடங்கிய நான் 

சிந்தும் வியர்வை 

துளிகளுள்
புதைந்த நான் 

செதுக்கிய சிலையின் 
வடிவத்திற்குள் 
ஒளிந்த நான் 

ஓய்ந்த அலைகளின் 
குளிரில் 
கரைந்த நான் 



மேகங்களின் 
சங்கமிப்பில் 
மூழ்கிய நான் 

நாதங்களின் 
இசையில் 
மயங்கிய நான் 

முத்தங்களுக்குள் 
மூச்சு முட்ட 
ஏக்கமான நான் 

பித்தங்களின் பிடியின் 
பிணற்றுகிறேன்

யாருமில்லா  
ஓரறையில் 
இருளின் 
துணையோடு 
ஏக்கம் தீர்க்க 
முற்படுகிறேன் 

எனக்கான 
என்னுடைய 
உயிர் 
எங்கே 
தத்தளிக்கிறதோ...?

அது மீண்டு வந்து 
என்னை 
மாண்டு போக வைக்குமோ 
அதன் உயிருக்குள்...

சொல்லா வேதனையாய் 
சுழன்று வீசும் 
என் மனமே...

பொறுமை கொள்வாயாக
நிதர்சன வாழ்க்கையில் 
நீடூழி வாழ 
தென்றலின் மீதமர்ந்து 
தீண்டவருவான் 
உன் தீண்டளுக்குரியவன் ...
( Deepa Vennila)

4 comments:

  1. அருமை! எளிமையான நடையில் உணர்வுகளின் வார்த்தைகள்!

    ReplyDelete
  2. பெண்ணின் ஒற்றை பார்வை மோகத்தை கண்டு நிலவு வெட்கி தேய்ந்ததை போல் இருக்கிறது கவிதையின் செறிவு !!!

    ReplyDelete
  3. உணர்வுப்பூர்ணமான வரிகள்...

    ReplyDelete