கூடு உரித்த பட்டாம்பூச்சியே....
கூடு உரித்த
பட்டாம்பூச்சியே
உலகு பார்த்த
உன்னுடைய இந்த முதற்பொழுதில்
தூதாய் போய் வா
... தலைநகர் சென்ற எந்தலைவனிடம்...
அவர் மேனி தீண்டாது
சொல்லி வா என் சோகத்தை....
"கார்குழல் கழுத்துடை தரித்து
வெண்புரவி மேலோடும்
அஞ்சா நெஞ்சுடைய தலைவா...
உன் நிழல் படா
நுன் தலைவியி னுடல்
மேனி ரோமம் சிலிர்ப்படைய,
உணவிறங்கா சோர்ந்துபோன
உடல் மெருகேற,
கவலைதோய்ந்த மனம்
புத்துணர்ச்சி பெற
தாமதம் காட்டாது
புரவியை திருப்புவாயாக...
"ஏக்கத்திலே உயிர் துறக்க
அவள் தயாராகி விட்டாள்
நீ வரவேண்டி...
விரைவாயாக...."
என்று
தூதுக் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிகள் பல.... உங்களுடைய கருத்துக்களால் எனக்கு இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது... நன்றி நன்றி...
Delete