Thursday, 18 April 2013

கிராமப்புற நிர்பந்தம்...

இருளின் ஆக்கிரமிப்பில்
சிறைபட்டிருந்தது
ஊர் முழுதும்....

குடிகொண்டிருந்த
ஒட்டு மொத்த நிசப்தமும்
மெதுவாய் இடையூறு பட்டது
சிலரின் குறட்டை சப்தத்தில்...

களவு பயத்தில்
இழுத்து சாத்தப்பட்டிருந்தன
அவரவர் வீடுகள்...

திடீரென்று ஏற்பட்ட
இனவெறித் தாக்குதலில்
ஏக வசனத்தில்
காரி உமிழ்ந்து கொண்டிருந்தன
நாய்கள்....

துளி வெளிச்சமும்
துடைர்த்தார்ப்போன்ற
இரவில் ,

திகிலடைந்தவளாய்
திண்ணையோரம்
துவண்டு கிடந்தாள்
தனிப் பெண்ணொருத்தி...

நாழி கரைய கரைய,
நெஞ்சுக் கூடு
விம்மல் கொண்டது
அச்சத்தால்...

இருட்டின் ஊடல்களில்
சிக்கித் தவித்து
சுழற்றப்பட்டாள்...
விசும்பல் கொண்டாள்...

திகமானது என்னவோ
பயம்தான்...

ஆசுவாசப்படுத்தி
தேற்றிக் கொள்வதற்குள்
அடகிருந்தது
அவள் சுவாசம்...

மூல காரணம்...
மாத 3 நாட்களில்
வீட்டுக்கு வெளியில்
என்ற கிராமப்புற நிர்பந்தம்...



3 comments:

  1. பெண்களின் வலியையும் வேதனையையும் சிறப்பாக சொன்ன கவிதை வரிகள்! நன்றி!

    ReplyDelete