"இந்த மாப்பிள்ளையை வேணாம் சொல்ற நீ, இனிமேல் இந்த வீட்ல இருக்க கூடாது..." கசையடியாய் பேசும் அப்பா, "நீ எவனையாவது கூட்டிடுதான் ஓட போற "கடுகடுக்கும் அம்மா, "நீ என்ன ஐஸ்வர்யா ராயோ..." எரிந்து விழும் தம்பி, "உன் மூஞ்சிக்கு இந்த மாப்பிள்ளை கிடைச்சதே பெரிசு..." ஏசிர்பத்து போடும் தங்கை. விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு அனுப்ப வழி வைத்து கொடுத்தனர் அவளை. மொத்தத்தில் வெறுப்பின் மறு உருவமாக மாறி இருந்தது அந்த குடும்பம். என்னவொரு திருத்தம் என்றால் ஒரு நேரத்தில் பாசத்தின் மாற்றுவாய் இருந்த குடும்பம். இப்படி ஆனதற்கு காரணம் மூத்தவளுக்கு முதலில் திருமணம் முடித்து வீடு கடத்த வேண்டும் என்பதே...
ஆனால் அவளுக்கு அந்த மாப்பிள்ளையை கட்டிக்கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை. தான் எதிர்பார்த்ததில் ஒரு சிறு அளவுகூட அவன் இல்லாததில் பொய்த்துப் போய்விட்டாள். மனம் நிறைவு பெறா நிலையில் மணமுடிக்க மறுக்கையில் கூட பிறந்தவர்களும் கோப பிழம்பை உமிழவே கொதித்துத்தான் போயிருந்தாள். இவர்களுக்கு இடைஞ்சலாய் இல்லமால் போய்விடலாம் எனமுடிவு எடுக்கையில் தன் மனம் நிறைய மாட்டிக்கொள்கிறான் அவன். அவன் பற்றிய விவரங்கள் அவளுக்கு அத்துப்படி ஏனென்றால் ஒரு முறை பேருந்து பயணத்தின் போது இவள் மாட்டிக்கொள்ள இருந்த விபத்தில் இவன் சிக்கி, அப்படியே இருவரும் நன்கு பரிட்சியமாகி இருந்தனர்.
ஆனால் அவன் இவளது சாதிக்காரன் அல்ல.... யோசிக்கிறாள். பின் தெளிவான முடிவு எடுக்கிறாள். "தன் விருப்பத்தை பெரிது படுத்தாது, சாதி, பணம் வெறியில் மாய்ந்து போயிருக்கும் பெற்றோர்களோடு அல்லோல படுவதற்கு, உயிர் காப்பாற்றிய சமயத்தில் கால் இழந்து விட்டிருந்த அந்த கண்ணனோடு வாழ்வது கோடி இன்பம்" என்று.
நல்ல முடிவு...
ReplyDelete