Thursday 27 December 2012

எனக்கு பிடித்த விளையாட்டுகள்...

கிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக்க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழுது இந்த மாதிரி விளையாட்டுகள் மறைந்து வருகிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு...


தாயத்தை உருட்டும் போது எப்படியாச்சும் அந்த காயை தூக்கிடணும்னு நினைச்சுக்கிட்டே சுழட்டி சுழட்டி உருட்டுவோம் பாருங்க.. அந்த சுகமே அலாதிதான்... இப்ப யாரு இதெல்லாம் உருட்டுற்றா..?




பொங்கல் நிகழ்ச்சிகளில் குழுவாக சேர்ந்து கும்மி கொட்டி விளையாடிய காலமும் இப்போது நினைவலைகளில்..



பள்ளி பருவத்தில் இந்த விளையாட்டில் பங்கேற்றவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா..?


பசங்களோட சண்டை போட்டு விளையாடி அம்மாக்கிட்ட அடிவாங்கிய நாட்கள் நினைவுக்கு வருகிறது இந்த விளையாட்டால்


ஐந்தாம் வகுப்புவரை எழுமிச்சை கரண்டி தூக்கி ஓடுவதில் பங்கு பெற்று விளையாடிய நியாபகம்
                                     


சின்ன வயசுல நொங்கு வண்டி ஒட்டுவோமே... சூப்பரா இருக்கும் இந்த விளையாட்டு

1 comment:

  1. எனக்கு மிகவும் புடிச்சிருக்கு தங்களின் கருத்தாக்கம். உங்களின் இந்த மாபெரும் சேவையை தொடர்வதற்கு எனதுவாழ்த்துக்கள். ---வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்" போல் காவியத்தில் இடம்பிடிக்கட்டும்.

    ReplyDelete