Monday, 24 December 2012

துளிர்த்துக் கொண்டிருக்கும் சதை ஆசை....


               மனதால் குரூரமாய் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே அடுத்தவர்கள் சேதமாகும் அளவிற்கு துன்புறுத்த முடியும்... டில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி கற்பழிக்கப் பட்ட செய்தியால் இந்த நாடே கொந்தளித்துக் கிடக்கிறது... டில்லி மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்தமாதிரியான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. தவறுகள் மேலோங்கிக் கிடக்கின்றன.. தட்டிகேட்டால் தடி அடி நிகழ்த்துகிற சமூகம் இது. அடிப்படையாகவேஇவர்கள் யாரும் யோசித்து பார்க்க மாட்டார்களா..? 


பண ஆசை அடங்கி சதை ஆசை அதிகரித்துப் போய்க்கிடக்கும் சமூகமாய் இந்த நாடு மாறி நாறிக் கொண்டிருப்பது வருந்தத்தக்க ஒன்றாக இருக்கிறது. - தொடர் கற்பழிப்பு தொடாராமல் இருக்க வழி..? தன் சுகம்தான் பெரிது என்றெண்ணி ஒரு பாலின் எதிர்காலத்தை நாசமாக்கும் நல்லவர்களே... உங்களை பற்றி பேசுவதற்கு கூட நா கூசுகிறது. நீங்கள் படுத்தும்பாட்டில் அவர்கள் துடித்திருப்பது கூடவா உங்களது எண்ண ஓட்டத்தை மாற்றவில்லை...


சுதந்திரம் கிடைத்ததாய் சொல்லப்படும் இந்த இந்தியாவில் தான் பெண்களின் கற்பு மட்டும் அடிமையாய் அடக்க முனைகிறார்கள் சில கயவர்கள்.. இந்த மாதிரி அசம்பாவிதங்கள் இந்தியா முழுவதும் முற்றிலும் ஒழிய அரசின் நடவடிக்கை என்ன..? மக்களின் கோரிக்கைகளுக்காகவும், நலனுக்காகவும், பாதுகாப்பிற்க்காவும் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு என்ன உறங்கி கொண்டிருக்கிறதா..? இந்த சமூகத்திற்கு என்று நியமிக்கப்பட்ட காவலர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? இந்த நாட்டில் புரட்சி உருவாக வேண்டும், சுத்தமான நாடாக வேண்டும், பெண்களின் கற்பு காக்கப்பட வேண்டும், சீர்குலையா சுதந்திரம் நிலவ வேண்டும் என்பது நீரில் எழுதப்பட்ட எழுத்தாகவே இருக்கிறது....? 



பெண்களின் வளர்ச்சியை மட்டம் தட்டும் ஆண்களும் இருக்கிறார்கள், வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள்... வன்புணர்ச்சி செய்யும் ஆண்களும்தான் இருக்கிறார்கள்.... பல குணம் தருகிறது ரணம்.... இப்படிப்பட்ட நாட்டில் தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு....

No comments:

Post a Comment