Thursday, 30 August 2012

நம்ம தஞ்சை பெரிய கோயிலுங்க...

நம் முன்னோர்களின் ரசனைக்கும், துள்ளிய சிந்தனைக்கும், வலிமைக்கும், ஆர்வத்திற்க்கும் ஈடு இணையானவர்கள் யாருமே கிடையாது..  அப்படிப் பட்டவர்களால்  கட்டப் பட்ட கோயில்தான் ராஜகளையோடு உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயில்.. அந்த கோயில் வரலாறு பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்..
பெரிய கோவிலின் ஏழு அதிசயங்கள்:
1 . சுட்டறு வட்டாரத்தில் 80 கி.மீ.க்கு மேல் மலை பிராந்தியம் கூட இல்லாத பகுதியில் எழுந்த மாபெரும் கருங்கல் காவியம்
2 . சுமார் 92 .7 அடி நீளம், 55 .9 அடி அகலம், 110  அடி உயரத்துடன் பிரம்மாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்திற்கான அஸ்திவாரம் வெறும் 6  அடிதான்
3 . அத்தனை பெரிய கோபுரமும் உட்புறம் கூடாக இருப்பதும் அதைக் கட்டிய விதமும்
4 . கிட்டத் தட்ட 1 ச.மீ. நிலப்பரப்புக்கு 47 .40  டன் கல் எடை உள்ள அந்த ஆயிரம் ஆண்டு கலைக் கோயிலில் இன்றளவும் ஒரு விரிசல்கூட விழவில்லை
5 . நம் வீடு வாசலில் நிலைகள் வைப்பது மாதிரி பெரிய கோவில் நிலைக் கால்கள் 40  அடி உயரம் 4 / 4  அளவில் ஒரே கல்
6 . கற்களை கற்களோடு பொருத்தி (lock  system)  கட்டப்பட்டது. துளி சுண்ணாம்பு கூட சேர்க்கப்படவில்லை
7 . இன்று பொறியாளர் கணிக்கும் டிகிரி அளவுகள் மாறாமல் எல்லா அமைப்புகளும் கட்டுமானப்படுத்தப்பட்டு உள்ளது.
இதிலும் இன்னொரு பெரிய சிறப்பு என்னவென்றால் பெரிய கோயிலின் உச்சியில் உள்ள ஒரே கல். ஒரே கல் 4 டன் எடையையும் அதிலே மாட்டு வண்டி சுற்றும் அளவு இடமும் உள்ளது. ஆனால் பெரிய கோயில் நிழல் விழாது என்பது மட்டும் கட்டுக் கதை. பெரிய கோயில் கோபுரத்தில் நிழல் விழும்.

1 comment: