Thursday, 30 August 2012

நம்ம தஞ்சை பெரிய கோயிலுங்க...

நம் முன்னோர்களின் ரசனைக்கும், துள்ளிய சிந்தனைக்கும், வலிமைக்கும், ஆர்வத்திற்க்கும் ஈடு இணையானவர்கள் யாருமே கிடையாது..  அப்படிப் பட்டவர்களால்  கட்டப் பட்ட கோயில்தான் ராஜகளையோடு உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயில்.. அந்த கோயில் வரலாறு பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்..
பெரிய கோவிலின் ஏழு அதிசயங்கள்:
1 . சுட்டறு வட்டாரத்தில் 80 கி.மீ.க்கு மேல் மலை பிராந்தியம் கூட இல்லாத பகுதியில் எழுந்த மாபெரும் கருங்கல் காவியம்
2 . சுமார் 92 .7 அடி நீளம், 55 .9 அடி அகலம், 110  அடி உயரத்துடன் பிரம்மாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்திற்கான அஸ்திவாரம் வெறும் 6  அடிதான்
3 . அத்தனை பெரிய கோபுரமும் உட்புறம் கூடாக இருப்பதும் அதைக் கட்டிய விதமும்
4 . கிட்டத் தட்ட 1 ச.மீ. நிலப்பரப்புக்கு 47 .40  டன் கல் எடை உள்ள அந்த ஆயிரம் ஆண்டு கலைக் கோயிலில் இன்றளவும் ஒரு விரிசல்கூட விழவில்லை
5 . நம் வீடு வாசலில் நிலைகள் வைப்பது மாதிரி பெரிய கோவில் நிலைக் கால்கள் 40  அடி உயரம் 4 / 4  அளவில் ஒரே கல்
6 . கற்களை கற்களோடு பொருத்தி (lock  system)  கட்டப்பட்டது. துளி சுண்ணாம்பு கூட சேர்க்கப்படவில்லை
7 . இன்று பொறியாளர் கணிக்கும் டிகிரி அளவுகள் மாறாமல் எல்லா அமைப்புகளும் கட்டுமானப்படுத்தப்பட்டு உள்ளது.
இதிலும் இன்னொரு பெரிய சிறப்பு என்னவென்றால் பெரிய கோயிலின் உச்சியில் உள்ள ஒரே கல். ஒரே கல் 4 டன் எடையையும் அதிலே மாட்டு வண்டி சுற்றும் அளவு இடமும் உள்ளது. ஆனால் பெரிய கோயில் நிழல் விழாது என்பது மட்டும் கட்டுக் கதை. பெரிய கோயில் கோபுரத்தில் நிழல் விழும்.

நிம்மதியான தூக்கம் ...

மனதிற்கு வெளியே பிரச்சனைகளை வைத்திருப்பவனுக்கு நினைத்த மாத்திரத்தில் நிம்மதியான தூக்கம் வருகிறது...
மனதை பிரச்சனைகளுக்குள் வைத்திருப்பவனுக்கு தூக்கம் யோசித்துக் கொண்டே தூரத்தில் நிற்கிறது....

Wednesday, 29 August 2012

இப்படியுமா...?!

மசாஜ்க்கள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்... இங்கயும் ஒரு விதமா மசாஜ் பண்றாங்க... தாய்வானின் வடக்கு பகுதியில் உள்ள ஹின்ஷு பகுதியில் கத்தி மசாச் பிரபலமடைந்து வருதாமுங்க.... இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும், உடலில் சேகரிக்கப்பட்டுள்ள சக்தியை அதிகரிக்கவும் இக் கத்தி மசாச் பயன்படுவதாகஅங்குள்ள மக்கள் ரொம்பவும் நம்புறாங்களாம் ...இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் இவ் மசாச் இல், கத்திகளின் கூர்மையான பகுதியை தலை, மூக்கு போன்ற இடங்களில் இரத்தம் வராது அழுத்துவார்கள். இதுவே கத்தி மசாச் என அழைக்கப்படுகிறது. 10 நிமிடங்கள் வரை நீடிக்கும் இவ் மசாச் க்கு வெறும் 3.3 அமெரிக்க டொலெர்கள் மாத்திரம் அறவிடப்படுகிறது. தாய்வான் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாம் இந்த கத்தி மசாச்.தாய்வானில் இவ் மசாச் முறை சட்டபூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அடங்கொக்கா மக்கா...

பெண்களின் மன சோர்வைப் போக்கும் யோகா....

இளம் பெண்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மன உளைச்சல் தான்...இந்த மன உளைச்சல், மனக்கோளாறு முதுகு வலி, தலைசுற்றல், பசியின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலிய உடல் ரீதியான பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் பெண்களின் இயல்பு வாழ்க்கை எளிதாக பாதிக்கப்படுகிறது. மனச்சோர்வுக்கு மருந்துடன் யோகா சேர்ந்தால் சிறந்த பலனளிக்கும்.
ஆசனங்கள்…. சூர்ய நமஸ்காரம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், சர்வங்காசனம் முதலியன. பிராணாயாமம் – கபால பூதி, வஸ்திரிகா, நாடி சுத்தம் பந்தங்கள் – மகா பந்தம்…..
மெனோபாஸ் (பெண்களின் நிரந்தரமாக மாதவிடாய் நிற்பது) – சாதாரணமாக நாற்பத்தைந்து வயதிலிருந்து ஐம்பத்தைந்து வயது வரை பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது. இது பெண்களின் ஆரோக்கிய வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம். இதனால் சிலருக்கு மனநல பாதிப்புகளும், உடல் நல பாதிப்புகளும் உண்டாகலாம். இந்த பாதிப்புகளை யோகாவால் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆசனங்கள்….. பாவன்முத்தாசனம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், மஸ்த்யேந்ராசனம், பஸ்சிமோத்தாசனம், விபரீத கரணி ஆசனம், ஹலாசனம், சர்வங்காசனம், வஜ்ராசனம், பத்மாசனம், சவாசனம் முதலியன. பிராணாயாமம் – வஸ்தி, கபால பதி, நாடி சுத்தம், உஜ்ஜையினி,
யோக முத்திரை…. பந்தம் – இருதய முத்திரை, பிராண முத்திரை, மகா பந்தம். தியானம் மற்றும் ஜெபம் செய்வது மெனோபாஸ்ஸால் உண்டாகும் மன உளைச்சலை போக்கும்

Tuesday, 28 August 2012

மிஞ்சியது ஏமாற்றம்






உன்னை மனக்கண்ணில்
நிறுத்துகையில்
உள்ளமும் உடலும்
ஒரு சேர சிலிர்க்கிறது
வெட்கத்தின் ஊடே
நாணமும் கலந்து

உன் விழி நோக்கையில்
புகை மூட்டமாய்
மறந்து போகிறாய்...
மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே...

Sunday, 26 August 2012

ஆசை கணவன்...



நெற்றியில்
திலகமிட்டு
தலையில்
பூ சூட்டிவிட்டு
தன் குழந்தையை
சுமந்து
கொண்டிருப்பவளுக்கு
இதழோடு
இதழ் பதித்து
முத்தம் ஒன்றை
பரிசளிக்கிறான்
கணவன்
விதவை மனைவியின்
கனவில்...


Wednesday, 15 August 2012

வாழிய வாழியவே...


வாழிய வாழியவே...
நாடொன்று வளர ஏடொன்று அவசியம் என்பது போல் எம் கழகம் தழைத்தோங்க இன்றியமையாதவர் நீரே...... பாட்டுக்களிலே பல பாக்களைப் படைத்திட்ட பாட்டுடைத் தலைவரே..... எம் வெண்தாடி வேந்தரின் அன்பிற்க்கு அடி பணிந்தவரே.... பார்ப்பன புரட்டுக்கு பதிலடி பலமாய் கொடுத்திட்டவரே... அகம்பாவம் கொண்டெழுந்த பார்ப்பன கூலிகளின் மூக்கை உம் பேனா மையின் துணைகொண்டே பதிலடியாய் அறுத்திட்டவரே... அறியாமை இருட்டில் அகப்பட்டவர்களுக்கு வார்த்தைகோவைகளிலே வெளிச்சம் தந்திட்ட மின்சாரமே... கழகத் தோழர்களுக்கு காவலனாய் இருக்கும் கருஞ்சட்டையே... கழகக் குடும்பத்தின் அரணாய் விளங்கும் மயிலாடனே... தலையங்கம் பல எழுதி நம்மை தலைநிமிர்வடைய செய்திட்டவரே...... எவ்வளவு பெரிய கேள்வி கணைக்கும் விரல்நுனியில் பதிலளிக்கும் கவி புலமையே.... உமக்கு நிகர் நீர் மட்டுமே... பவள ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பகுத்தறிவு வேங்கையே... பல்லாண்டு வாழ்க என உம்மை வாழ்த்தும் அளவிற்க்கு வயது வராவிட்டாலும் வழி தெரியாவிட்டாலும் வணங்கி மகிழ்கிறோம்.......! மகிழ்ச்சியுடன் வெண்ணிலா....