Thursday, 19 September 2013

முத்த சிற்பங்களை....

முழு பெளர்ணாமியின்
வெளிச்சபொலிவை
முழுவதுமாய்
தேசிங்கு ராசனின்
காந்தக் கண்கள்
உள் வாங்கிய வண்ணமிருக்க,
அவன் கரங்களோ
எதிரில் நாணிவந்த
பாவையவளின்
கொடிஇடை பிடித்து இழுக்க, 
அன்றில் மலர்ந்த
விழி பூவில்
இதழ் இலைகள் கொண்டு
இதமாய் பதித்து வைக்கிறான்
காதலில் சொக்கிப் போன
முத்த சிற்பங்களை....
 

2 comments:

  1. முத்த சிற்பம்! ரசனையான வரிகள்! அழகான கவிதை வாழ்த்துக்கள்!

    ReplyDelete