Thursday, 18 April 2013

"மறை பொருள்"

 
 
சந்தனத்தில் நீராடி,
அலைகற்றை கூந்தலை
உலர்த்தி அடக்கி,
வாசமல்லி மணம்கமழ
நேர்த்தியான பின்னலில்
சரத்தோடு சொருகி,
முகப்பூச்சு அளவாயிட்டு,
முழுமதி கண்களில்
மை தனை தீட்டி,
உதட்டுச்சாயம் ஒளிர,
பளிச்சென்றிருந்த
நீலவண்ண பட்டுத்தாவணியை
பார்த்து உடுத்தி,
 

இணையான கலரில்
தோடோடு, வளையலும்
கழுத்தில் கல்மணியுமிட்டு,
கண்ணாடிபார்த்து
களிப்புற்றாள் தன்னழகில். . .
மிச்ச ஒரு வேலையாய்
கண்கள் மட்டும்
தெரியவிட்டு
உடுத்திக்கொண்டாள்
கருப்புவண்ண பர்தாவை 
அந்தப் பளிங்கு பெண். .

("மறை பொருள்" என்ற மௌன குறும்படம் சொல்லிய கவிதை)

நிறுத்தத்தில் நிற்கும் நிகண்டுகள்....

 

 
 
அரசலும் உரசலுமான பேருந்து பயணத்திற்கு
அவதி அவதியாய் அரைத்த துவையலில்,

கூலிக்கு செல்லும் அம்மாவிற்கு கொஞ்சமும்
தனக்கு வைத்த தயிர் சோறுக்கு கொஞ்சமும்
அள்ளிக்கொண்டு,

லேசாய் செய்த முகப்பூச்சோடு 
மடிப்பான சேலையை எடுத்துவிட்டு கிளம்பினேன்....

நிறுத்தத்தில் நின்ற கூட்டத்தோடு சேர்ந்து
நானும் நசுங்க தயாராக்கினேன் உடலும் மனதும் சேர்ந்து...

 
"வகிடு எடுத்த தலையில்
வழித்து வைத்த எண்ணையோடு
 
பிசிறு நீங்கிய பின்னலில்
கொஞ்சம் சொருகிய பூவோடு
எளிமையான உடையில் தயாரான
கல்லூரி பெண்கள்...

அவர்களை கண்ணும் கருத்துமாய்
காவல் செய்து கடலை போட
தயாராய் இருந்த விடலை பையன்கள்...

தினசரி கூலி பெற
பழைய சோறு வாளி தூக்கிய
குடும்ப பொறுப்பாளர்கள்...

வீட்டுபாரம் சுமக்க படிப்பை துறந்து
சிறு கடைகளுக்கு எடுபிடியாய்
அடிமைப்பட்ட, ஏக்கம் நிறைந்த
விழிகளைக் கொண்ட
'சிறுமி - கன்னி' இரண்டிற்கும் இடைப்பட்ட பெண்கள்...

பட்டிக்காட்டிலிருந்து பட்டணம் நோக்கி
படிப்பு பெற பொதிமூட்டையாய்
புத்தகப் பையுடன் எதிர்பார்த்த பேருந்தை
எட்டி நோக்கிய வண்ணம் நிற்ற பள்ளி சிறார்கள்...

அடிக்கடி இருமலுக்கும்
அவதிப்படும் உடம்புக்கும்
வைத்தியம் பார்க்க
அரசு ஆஸ்பத்திரிக்கு போக முனைத்த வயோதிகர்கள்..

கம்புக்கு கட்டிய சேலையையும்
காமத்தோடு நோட்டம் விடுவதுபோல்
நிற்றிருந்த கழிசடைகள்....

காதலிக்கு ஏற்றவாறு
காதல் பாட்டு செல்போனில் 
ஒலிக்கவைக்கும் சில்லுவண்டுகள்...

இவர்களுடனான என் பயணம்
தொடர்கிறது தினந்தோறும்...

Tuesday, 16 April 2013

நவிழ்ச்சி அடையுமல்லோ...?

துளி உயிர்
மீண்டெழ
நா நுனியோரம்
நல்முத்தம்
ஈன்றாயென்றால்
நறுமுகையான
நென்மனம்
நவிழ்ச்சி அடையுமல்லோ...?

மனம் திருடிய மழைத்துளியே.....




மனம் திருடிய
மழைத்துளியே.....
ஏன் மறந்தாய்
எனை இத்தனை நாளாய்...?
உனது சஞ்சரிப்பில்
ஒருங்கிணைய
என்வசம்
மறந்துபோக
செதுக்கிய இதழ்களில்
மிஞ்சிய துடிப்போடு
காத்திருக்கிறேன்...




உலர்ந்த மண்ணுக்கு
உயிர் தந்த நீ
என்னுள்ளும்
தூறல் போடு...
அந்தானத்தில்
மழலையாய் மாறிப்போன
என்னை அள்ளி
அனைத்துகொள்ளு
அன்னையாக....

Thursday, 11 April 2013

உயிர் திரித்ததால்....

வற்றிய உதடுதுணுக்குகளில்
ஒட்டிக்கிடந்த ஈரப்பசையை
நாவால் ஒற்றி எடுத்து
மீண்டுயிர் பெற்றேன்
நின்னுடனான ஏக்கம்
உயிர் திரித்ததால்....

செந்நிறக் கண்ணனே....

தீப்பிழம்பை திரியாக்கினார்ப் போல்
சிவந்த செந்நிறக் கண்ணனே....
இதென்று காரும் னென்
காமமறியாக் காதலிதனைக்
கடைக்கண் வீச்செடுத்து களங்கமின்றி
எடுத்தியம்பி
என்நியலான துன்பமறைய
தெவிட்டாத தினையமுதாம்
நின்னன்பை
ஈட்டியருள்வாய் நீ
என்றனுள்ளம்தனிலே....

Monday, 7 January 2013

நான் ஒரு கேள்விக்குறியாய்...



ஆங்கில புத்தாண்டு அமைதியில்லாமல் தொடங்கியது... எதையோ தொலைத்தாற்ப்போல் வலிபோருந்திய மனதோடே நகர ஆரம்பித்தது. ஏன் பிறந்தோம்..? எதற்க்காக வளர்த்து விட்டனர் என்னை..? நான் சாதிக்கப் போவது என்ன..? இந்த உலகில் நான் எனக்கு என்று ஒரு அடையாளத்தோடு இருப்பேனா..? நான் நல்லவளா...? யாரையாவது ஏமாற்றி இருக்கிறேனா..? என்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளேன்...? அவர்களிடம் உண்மையாக இருக்கிறேனா..? சொந்தபந்தகளைப் புரிந்து நடந்திருக்கிறேனா...? யார் மனதாவது நோகும்படி இதுவரை நடந்துருக்கிறேனா..? இதுநாள் வரை நான் அனுபவப்பட்டதில் எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணமாய் இருந்தது இரண்டுதான்.... ஓன்று பணம், பணம், பணம்.... மற்றொன்று சாதி சாதி சாதி.... இவை இரண்டிற்கும் ஒரு முடிவு இருந்தால் நான் படும் கஷ்டத்திற்கும், இந்த நாட்டின் தலையான பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைத்து விடும்...  முதலில் நான் நானாக இருக்கிறேனா...? எனக்கு அமைந்ததை வைத்து என்னால் என் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை...?  நான் இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சரியா வாழ்வேனா...? வாய்ச்சொல்லாய் மட்டும் புரட்சி பேசுவது சரியா...? எனக்காய் மட்டுமே வாழ முடிவெடுத்த ஒரு துணையை உதறித் தள்ளுவது முறையா..? என்னுடைய மாற்றம் எப்பொழு நிகழும்...?