Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Monday, 29 October 2012

செயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி...





            செயற்கை நுரையீரல் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஆய்வுக்கூடத்தில் நுரையீரலை உருவாக்கி நோயாளிக்கு பொருத்திவிட முடியும்.

வேர் செல்கள் எனும் மூல செல்கள் நம் உடலின் பல்வேறு பாகங்களில் உள்ளன. இந்த செல்களிலிருந்து நம் உடலில் செயல்படும் பல்வேறு உறுப்புகளின் செல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது நுரையீரலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லிருந்து நுரையீரலை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதற்கு முன்பு மனித உறுப்புகளை குளோனிங் குழந்தை முறையில் பெறும் முயற்சி நடந்தன. குழந்தையை வளர்ப்பதற்குப் பதிலாக குறிப்பிட்ட உறுப்பை வளர்க்கும் அம்முறைக்கு தற்போது உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வேர்ச்செல்களிலிருந்து திசு வளர்ப்பு முறைதான் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் எளிமையான முறை என்று விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார்கள்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நுரையீரல் திசு வளர்க்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரி செய்யவும் இந்த ஆய்வு உதவும்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

பெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்




ஜெர்மானியராகப் பிறந்தவர் ஐன்ஸ்டீன். நாஜீகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சிசாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அவரை அந்த ஆராய்ச்சி சாலைக்கு அழைத்துச் சென்று, சுற்றிக்காட்டி திருப்திதானா? என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கேட்டனர்.



ஐன்ஸ்டீன் சற்று தயங்கி தாழ்ந்த குரலில் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி "இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறது, கொஞ்சம் பெரிய குப்பைக் கூடை இருந்தால் நல்லது” என்றார்.

"பெரிய குப்பைக் கூடையா, எதற்கு?”

“நான் என்ன மேதாவியா… எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன், எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்துவிட்டு மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாக செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார்.

தற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது?



பண்டைக்காலம் முதலே மனிதர்களிடம் தற்கொலை உணர்வு இருந்து வந்திருக்கிறது. இதற்குக்காரணமாக சமூக, பொருளாதார மற்றும் தனிப்பட்ட காரணங்களைக்கூற முடியும். இதைப் போன்ற காரணங்கள் உள்ள அனைவரும் தற்கொலை முடிவிற்குப்போவதில்லை. சிலர் மட்டுமே தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றனர். ஏன் அப்படி?
உளவியல் நிபுணர்கள் தற்கொலை பற்றிய பல சித்தாந்தங்களை முன்வைக்கின்றனர். எந்தவொரு சித்தாந்தமும
் இறுதியானது என்ற நிலையை இன்னும் எட்டவில்லை.





உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டு கூறும் தத்துவத்தின்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே இறப்பு குறித்த ஒரு ஆர்வம் இருக்கிறதாம். தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ள, புரியாத ஒன்றை புரிந்துகொள்ள, இதுவரை அனுபவித்து அறியாத ஒன்றை அனுபவிக்க மனிதருக்குள் ஓர் ஆர்வம் உந்திக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.


நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது imipramine receptor sites குறைவாக இருப்பது தெரியவந்தது. Imipramine receptors என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். செரடோனின் சுரத்தலை தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணம் குறைக்கப்படுகிறது.
தற்கொலை செய்துகொள்பவர்களிடம் அதற்கு முன்னதாக சில மாற்றங்கள் காணப்படுகின்றன. உடனிருப்பவர்களால் அந்த மாற்றங்களை உணர முடியும்.

அடிப்படை குணாதிசயங்களில் மாற்றம், எதிலும் பிடிப்பின்றி தனியே ஒதுங்கியிருத்தல், அடிக்கடி எரிச்சலடைதல், வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை, திடீரென அழுகை...கோபம்...துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல், மரணத்தைப்பற்றி அடிக்கடி பேசுதல் ஆகிய மாற்றங்களை நெருங்கிய தொடர்புடையவர்கள் கண்டறிந்து தற்கொலைகளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: கலைக்கதிர், டிசம்பர் 2008
தகவல்: மு.குருமூர்த்தி

விலங்குகளைக் கொல்லாமல் கிடைக்கும் இறைச்சி...






விலங்குகளைக் கொன்று பெறும் இறைச்சியை ஆய்வுக் கூடத்தில் செயற்கையாகவே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் கொல்லப்படுவதன் மூலம் நாம் இறைச்சி பெறுகிறோம். ஆனால் எதிர்காலத்தில் இதற்க்கு முடிவு கட்டி ஆய்வுக் கூடங்களிலிருந்து நேரடியாக இறைச்சியே கிடைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

விலங்குகளிலிருந்து பெறப்படும் திசுக்கள் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படும் போது அவை இறைச்சியாகின்றன. இவற்றை வேண்டிய அளவுக்குக் கொழுப்பு மற்றும் சத்துக்களையும் அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும் என்பதும் இந்த முறையில் செயற்கை இறைச்சியை தற்போதே ஆய்வுக் கூடத்தில் உருவாக்க முடியும். ஆனால் வர்த்தக ரீதியில் ஒட்டு மொத்தமாக உருவாக்குவது பற்றிதான் இப்போது பேச்சே.

ஒரு செல்லிலிருந்து இந்த உலகத்துக்குக் தேவைப்படும் இறைச்சியை விலங்குகளைக் கொல்லாமலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். முதலில் மருத்துவத் தேவைக்காக விலங்குகள் செல்கள் திசு வளர்ப்பு முறையில் அதிகரிக்கப்பட்டன. தற்போது இறைச்சித் தேவையையும் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். விலங்கு செல்தான் இதற்கு மூல ஆதாரம் என்றாலும் ஆய்வுக்கூடங்களில் வளர்ந்த கறி விலங்கிலிருந்து எடுக்கப்படவில்லை என்பதால் அது சைவமா அசைவமா என்ற சர்ச்சை கூட எதிர்காலத்தில் எழும்.

ஃபாஸ்ட் புட் விபரீதம்...



                                            



இந்தியாவில் துரித உணவை 
சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காய்கறிகள் சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச் ஃபிரையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. இதனால் சிறுவயதிலேயே உடல்பருமன் நோய் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கூல்டிரிங்க்ஸ்களின் உபயோகம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல் நூற்று
எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில் இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.

Friday, 26 October 2012

பெஞ்சமின் பிராங்க்ளின்


           பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால், சகுனம் என்று கருதலாம்.                                                                                   அப்படிக் கருதினால் நீங்கள் மனிதனல்ல, சுண்டெலி...
                                                       = பெஞ்சமின் பிராங்க்ளின்