Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Tuesday, 6 November 2012

மனிதருள் மாமனிதன் சே குவேரா...


பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்...





1960ல் எடுக்கப்பட்ட சேவின் பிரபல்யமான புகைப்படம்



கியூபாவின் வரைபடம்




கியூபாவின் ஒரு பகுதி



குடும்பத்தினருடன்



சதுரங்கம் விளையாடும் சே...




ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சே...



சமவுடமையின் இலச்சினை...


ஜூலை 26 இயக்கத்தின் கொடி...



சே பயணித்த பாதை 1953-1956...



22 வயதில் சே குவேரா...


மனைவி ஹில்டாவுடன்...




Friday, 2 November 2012

1947 august 15 th news paper.....!!

INDEPENDENT of INDIA


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !


சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே.. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

முதலாம் உலகப்போரின் மிக அரிய புகைப்படங்கள்!

பார்க்க தவறாதிங்க












Tuesday, 30 October 2012

உலகையே உலுக்கிய புகைப்படம்...



சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த படம் .அந்த குழந்தை இறந்தவுடன் அதனை உண்ண காத்திருக்கும் பறவை என எடுக்கப்பட்ட புகைப்படம் உலகையே உலுக்கியது. இந்த படத்தை எடுத்த Kevin Carter மன அழுத்தத்தால் மூன்று மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார்

Monday, 29 October 2012

‘தாய்’ நாயகன்...



  உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால்


தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.

இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.

அன்றைய செண்ட்பீட்டர்ஸ் பார்க் என்ற ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டு கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ்பெற்ற தாய் நாவல். கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை

Thursday, 25 October 2012

அமெரிக்காவை கண்டறிந்தது கொலம்பஸா...?


                       அமெரிக்காவை கண்டறிந்தது கொலம்பஸ் அல்ல.. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா..? இருங்கள் இருங்கள்.. இந்த வரலாறை முழுமையாக படித்து விட்டு தெரிந்து கொள்ளுங்கள்...

                       மார்க்கோபோலோவின் பயணக்குறிப்பை வாசித்த கொலம்பஸ் கடற்பயணம் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த காலத்தில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே வாணிகம் தரை வழியாக தான் நடைபெற்றது. எனவே, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு கடல் வழி கண்டறியும் தேவை ஏற்பட்
டதால் மேற்கு திசையில் கடற்பயணம் செய்து இந்தியாவிற்கு செல்வதைக் குறிக்கோளாக கொண்டிருந்தார். 

                     கி.பி. 1492 இல் ஸ்பெயின் மன்னரின் ஆதரவு பெற்று "சாந்தாமரியா" என்ற கப்பலில் பயணம் மேற்கொண்டார். 50 நாட்கள் பயணத்திற்குப் பிறகு வடஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மேற்கு இந்திய தீவுகளை வந்தடைந்தார். இவற்றை "இந்தியத் தீவுகள்" என்று கொலம்பஸ் எண்ணினார். அப்பகுதி மக்களை "செவ்விந்தியர்கள்" என்றும் கருதினார்.

                    இவருக்குப் பின்தான் கி.பி. 1520 இல் கடற்பயணம் மேற்கொண்ட "அமெரிக்கோ வெஸ்புகி" என்பவர் கொலம்பஸ் கண்டறிந்தது இந்தியப் பகுதி அன்று. அது ஒரு புதிய நிலப்பகுதி என்று கூறினார். எனவே அப்பகுதி அவர் பெயரால் "அமெரிக்கா" என்று பெயரிடப்பட்டது. இப்ப சொல்லுங்க... அமெரிக்காவை கண்டறிந்தது யார்...?