Tuesday, 6 November 2012

மதம் செய்த மாயைதான் தாலி...



                        
"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி"
"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி"
"ஆணினத்தின் அடிமை என்பதை சுட்டிக் காட்டும் சின்னம் தாலி"
“பெருங்குற்றவாளிகளுக்கு கைவிலங்கு…
ஆனால் ஒரு குற்றமும் செய்யாத பெண்ணினத்திற்கோ
கழுத்தில் கட்டிய தாலி விலங்கு"


 "தாலி ஒரு வேலி", "தாலி ஒரு பாதுகாப்பு", "அந்நியன் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு அரண்" என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டக்காரர்களின்  புலம்பல்கள். "ஆணின் அடிமை", "சம்பளமற்ற வேலைக்காரி" இவைகளை குறித்துக் காட்ட கட்டப்படும் அடிமை சின்னம்தான் தாலி.

இந்த அடிமை சின்னத்தை பெரிதும் போற்றக்கூடிய வகையில் இன்றும் நம் பெண்ணினம் வந்து கொண்டுதான் இருக்கிறது. சங்க இலக்கியங்களில் ஆணின் வீரத்தை காட்டி ஒரு பெண்ணை மணந்தான் என்றும், வீரத்தின் அறிகுறியாக விலங்குகளின் பற்கள், கொம்புகளை தங்க அணிகலன்களாக அணிந்து பெண்களை மணந்தார்கள் என்று நூல்களின் வாயிலாக அறிந்தோம். மேலும் சில சாதியினர் பொற்கொல்லர்கள் தன்னுடைய வேலைத்திறனை காட்டிப் பெண்ணை மணந்தார்கள் என்றும் தெரிய வருகிறது (மணமேடை அருகிலேயே தங்கத்தை உருக்கி தாலி அணிவித்ததாக). ஆனால் இந்தக் காலத்தில் கடையில் தங்கம் வாங்கி தாலியை அணிவிக்கிறார்கள். எப்படிப் புனிதமாகும்..?


பெண்ணுரிமை தட்டிப் பறிக்கும் சின்னம்தான் தாலி. பொதுவாக ஒரு பெண் பிறந்தவுடன் தகப்பனுக்கு அடிமை, தாலி அணிந்தவுடன் கணவனுக்கு அடிமை, கணவன் இறந்தபின் தாலி சின்னத்தை அறுத்து அவள் மகனுக்கு அடிமையாகிவிடுகிறாள். (மதம் செய்த மாயை தாலி)

            தாலியைப் பொறுத்தவரையில் சில பெண்களின் உள்ளத்தில் ஏற்றி வைத்த சொற்கள் "தாலியைக் கழற்றினால் கணவனின் உயிர்க்கு ஆபத்து", "விரைவில் குடும்ப பந்தம் முறிந்து விடும்" என்ற மூட கருத்துக்களை பெண்ணின் உள்ளத்தில் பதித்ததால் தாலியைப் புனிதமாகப் போற்றுகின்றனர். அதே நேரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் மோதல்களின் போது பெண் தாலியை தூக்கி எறிவதும் பின்னால் மாற்றிக் கொள்வதையும் கண்கூடாக பார்க்கிறோம்.மேலும் தாலியைப் புனிதமாகக்  கருதும் பெண்ணினம் செய்யும் செயல்கள் போற்றத்தக்கதாக இல்லை. 

சுயமரியாதைக் கொள்கையுள்ள பெண்கள்  தாலி அணிவதில்லை. பெரியாரின் பேச்சுக்கள் அவளை உரிமை பெற வைத்து விட்டது. இவ்வையகத்தில் ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கு வேண்டும் என்று எங்களைப் போன்ற பெண்களை விழிப்படைய செய்து விட்டது. எங்கள் திருமணங்களில் தாலி இல்லை. மாலை இல்லை, அழகான தத்துவச் சொற்கள் உள்ளன. அதிலும் தாலிச் சின்னம் எப்படி உண்டாயிற்று என்பதையும் அறியும் போது, சிரிப்பாகவும் அவமானவாகவும் இருக்கிறது. எனவே இந்த தாலி என்னும் அடிமை சின்னத்தை ஒழிப்போமாக..


மனிதருள் மாமனிதன் சே குவேரா...


பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்...





1960ல் எடுக்கப்பட்ட சேவின் பிரபல்யமான புகைப்படம்



கியூபாவின் வரைபடம்




கியூபாவின் ஒரு பகுதி



குடும்பத்தினருடன்



சதுரங்கம் விளையாடும் சே...




ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சே...



சமவுடமையின் இலச்சினை...


ஜூலை 26 இயக்கத்தின் கொடி...



சே பயணித்த பாதை 1953-1956...



22 வயதில் சே குவேரா...


மனைவி ஹில்டாவுடன்...




Sunday, 4 November 2012

அவனுக்காக மட்டும்....




எப்படி ஆரம்பிப்பது
என்றெண்ணுகையில் போராட்டம்தான் ...
அன்பானவனே...!
      உயிரானவனே...!
மூச்சானவானே...!
      கண்ணாளனே....!
கருத்தாளனே...
      கள்ளங் கபடமில்லா காதலனே...!
எதற்கு முதலிடம் கொடுப்பது...
திணறிப் போய் திக்கு முக்காடினேன்  சிறு வினாடி...
எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு
என்னுள் இருந்தே ஆரம்பித்தேன்...
    என்னுடையவனே...!
    என் இதயத்தில் முப்பொழுதும் இனிப்பவனே..!
அளப்பரிய பாசத்தை ஆளும் ஆளுமையே...!
என்பால் பொழியும் அளவற்ற உன்தம் அன்பில்
நெகிழ்ந்து நெகிழ்ந்து இறக்கிறேனடாநொடிக்கு நொடி...
நான் தரித்த மானுட பிறவியின் பயனாய்
உனக்கென்று பரிசளிக்க என்னுயிர் தவிர
மீதவற்றை தொலைத்து விட்டேனடா...
பிழை பொறுத்து ஏற்றுக் கொள்
இந்த அற்ப உயிரை உன் வசத்தில் அடிமையாய்...
தெரிந்து கொள்...
பூலோகம் புதையும் வரை உன் புகழ் பாடுவேன்..
என் கருவில் மலர்ந்த கவிதைகளின்
தாய் நான் என்றால்
அக்கரு உருப்பெற உறுதுணையாய்
அமைந்த நீயே அதன் தந்தையாய்...
காரிகை இவள் கோபம் கொள்ளுகையில்
கவனமாய் கடைபிடித்த உன் உணர்ச்சி கண்டு
மெய்சிலிர்த்து தான் போனேனடா...
எனை நீங்கா சிறுபிள்ளைத்தனம் அறிந்து
சேயென உச்சிமுகர்ந்திட்டாய்...
ஆதலால்....
என் கைவிரல்கள் கோபம் கொள்ளும்
உன் கவி படைக்கப் படாத பொழுது...
கருவிழிகள் இரண்டிலும் நீர் சுரக்கும்
உன் முகம் தன்னை நோக்காத பொழுது....
இணையும் இதழ்களும் இன்னல் பல ஏற்கும்
உனைப் பேச மறந்த பொழுது....
உயிரின் காதலனே...
உவமையாய் நீ உருப்பெற
உயிர்தந்து உதவிடுவேனடா....
தமிழ் மொழியின் சிறப்பான
'ழ' கரம் போல் சிறந்தவனே...
ஒப்பனைக் களஞ்சியமான
உன் வரி பல படித்து
பஞ்சணைப் பறவையாய் பறந்து
நாடுவேன் உன் நெஞ்சணையை...
உன்னுள் ஒருங்கிணைந்த நான்
இப்பிறவி முடித்து வாழ்வின்
ஆதாரத்தைக் கைக்கொண்டு விட்டேனடா....
உனக்கான நன்றிகளை சொல்ல
இக்கவி மட்டுமல்ல....
ஓராயிரம் கவி படைத்தாலும்
போதாதடா...
வாழ்..! வாழ்ந்துகொண்டே இரு...!

Friday, 2 November 2012

1947 august 15 th news paper.....!!

INDEPENDENT of INDIA


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !


சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே.. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

முதலாம் உலகப்போரின் மிக அரிய புகைப்படங்கள்!

பார்க்க தவறாதிங்க












Thursday, 1 November 2012

காவியக் காதல்...

பசலைநோய் காதலியும் வெற்றி வாகை சூடி வந்த தலைவனும்...




அவள் நாணி தலை சாய்ந்தாள்...
ஆஜானுபாகுவான ஆடவனின் அரவணைப்பால்...
இனியாளின் இடை அழகு கண்டு
ஈசனும் சொக்கித்தான் போனான்...
உள்ளங்கள் இரண்டும் கசிந்துருகிய வேளையில்
ஊற்றெடுத்து பெருகித் திளைத்த அன்பில்
எதிர்பாரா தருணத்தில் இதழ் பதித்தான் கன்னத்தில்...
ஏக்கம் தீர்த்த தலைவனை நோக்கிய தலைவி
ஐயமும் சோகமும் கலந்த குரலில்
ஒருகணமும் நீர் எனை நீங்கினால் மறுகணம் செல்வேன் மண்ணுலகம் என
ஓர விழியில் நீர் கசிந்தால் அந்த ஆரணங்கு....
ஒளடதம் கொடுத்து நங்கையின் பசலை நோயின் பிணி தீர்த்தான் இள வேங்கை...
இதல்லவோ காவியக் காதல்...